Home /News /entertainment /

நடிகர்கள் சம்பளம், ஓ.டி.டி வெளியீடு குறித்து திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் ஆலோசனை

நடிகர்கள் சம்பளம், ஓ.டி.டி வெளியீடு குறித்து திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் ஆலோசனை

திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர்

திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர்

ஆந்திராவைப் போல் தமிழகத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய வாய்ப்பு. சேலத்தில் வரும் 10-ம் தேதி திரையரங்க உரிமையாளர்கள் கூட்டத்தில் முடிவு. 

  • News18
  • Last Updated :
நடிகர்கள் சம்பளம், ஓ.டி.டி வெளியீடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் ஆலோசனை நடத்த உள்ளனர்.

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் வரும் 10-ம் தேதி சேலத்தில் உள்ள ரேடிசன் ஹோட்டலில் நடைபெறுகிறது. பன்னீர்செல்வம் மற்றும் திருப்பூர் சுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் நடைபெறும் அந்த கூட்டத்தில் நடிகர்கள் சம்பளம், திரைப்படங்களை ஓ.டி.டியில் வெளியிடும் நாட்கள், மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.

அந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து திரையரங்க உரிமையாளர்கள் கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. அந்த கூட்டத்தில் தற்போது ஆந்திராவில் நடைபெற்று வரும் வேலைநிறுத்தம் போல தமிழகத்திலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாமா என்பது குறித்து விவாதிக்கினறனர். இருந்தாலும் வேலை நிறுத்தம் உள்ளதா இல்லையா என்பது அந்த கூட்டத்தின் இறுதியில் முடிவு எடுக்கப்படும் என திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

Also read... Poikkal Kuthirai Movie Review: எப்படி இருக்கிறது பொய்க்கால் குதிரை படம்?

தமிழ் திரைப்படங்கள் வெளியாகி 28 நாட்கள் கழித்து ஓ.டி.டியில் வெளியிடப்படுகிறது. அந்த நாட்களை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர். அந்த விவகாரம் சேலத்தில் நடைபெறும் திரையரங்க உரிமையாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment, Theatre

அடுத்த செய்தி