முன்னணி நடிகர்களின் படங்கள் திரைக்கு வந்து எட்டு வாரங்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியிட அனுமதிக்குமாறு தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார் .
பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் பொருளாளர் டி.சி.இளங்கோவன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.
தற்போது திரையரங்குகள் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு விட்டதால், திரையரங்க உரிமங்கள் புதுபிக்க பழைய ஆப்ரேட்டர் லைசென்ஸ் முறை தேவையில்லை என்று உத்தரவிட வேண்டும். திரை அரங்குகளின் உரிமங்களை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கும் வகையில் உத்தரவிட வேண்டும், லோக்கல் பாடி டாக்ஸ் நீக்கவேண்டும், பராமரிப்பு கட்டணங்களை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், கொரோனா வைரஸ் தொற்று முடிந்து இரண்டு வருடத்திற்கு பின்னர் தற்போது தான் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் வருகிறது. இதன் மூலமாக தீர்மானங்கள் நிறைவேற்றி தமிழக முதலமைச்சருக்கு தெரிவிக்க இருக்கிறோம் .
தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்கள் உரிமம் 3 வருடத்திற்கு லைசன்ஸ் புதுப்பிக்க கேட்டுக் கொண்டுள்ளோம். இதே போல சினிமா ஆப்ரேட்டர்கள் டிப்ளமோ படித்தவர்களை பணியில் அமர்த்த அனுமதிக்க கேட்டுக் கொண்டிருக்கிறோம். மேலும் தமிழகத்தில் சினிமா டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று தெரிவித்தார்.
மேலும், முன்னணி நடிகர் அமீர்கான் தனது படங்கள் திரையரங்கிற்கு வந்து ஆறு மாதங்களுக்கு பிறகே ஓடிடி தளத்தில்
வெளியிட வேண்டும் என்று தெரிவித்து உள்ளார். இதனை வரவேற்கிறோம். அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இதே போல தமிழகத்தின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற நடிகர்கள் தங்களது படங்கள் தியேட்டர் ரிலீஸ்க்கு பிறகு 8 வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியிட வேண்டும் என தயாரிப்பாளர்களிடம் வலியுறுத்த வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.
தமிழகத்தில் தான் டிக்கெட் கட்டணம் குறைவாக உள்ளது. பெங்களூர், மும்பை, திருவனந்தபுரம் போன்ற நகரங்களில் 500 முதல் 800 ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் உள்ளது . தமிழகத்தில் மட்டும் தான் அதிகபட்ச கட்டணம் 190 ரூபாயாக உள்ளது . ஆன்லைனில் தான் டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது. எங்களது கோரிக்கைகள் தொடர்பாக தமிழக முதலமைச்சரை விரைவில் சந்தித்து நேரில் விளக்கம் அளிக்க உள்ளோம் . தமிழக முதல்வர் எங்கள் மீது அன்பு பாசம் கொண்டவர். எங்களது கோரிக்கைகளை அவர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம் என்றார்.
Also read... மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் நடிகர் விஷாலுக்கு காயம்
கமலின் விக்ரம் 2 மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலம் அவர் பழைய மார்க்கெட்டை பிடித்திருக்கிறார் . ஓடிடி தளத்தில் நேரடியாக அவரது திரைப்படம் விக்ரம் திரையிடப்பட்டிருந்தால் இவ்வளவு வரவேற்பு கிடைத்திருக்காது. எனவே நடிகர்கள் திரையரங்கிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்காக தியேட்டரில் படம் வெளியிடப்படுவதற்கும் ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கும் எட்டு வார காலம் இடைவெளி வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம் என திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி அளித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Theatre