திரை பிரபலங்கள் சொகுசு கார்களுக்கு முழு வரி செலுத்தாததால் அரசின் வருவாய் பாதிப்பு: நீதிமன்றம் குற்றச்சாட்டு

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு நுழைவு வரி செலுத்த தேவையில்லை என சென்னை உயர் நீதிமன்றமும், கேரளா உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளதாகவும் இயக்குனர் ஷங்கர் தனது மனுவில் சுட்டிக் காட்டியிருந்தார்.

Web Desk | news18
Updated: September 13, 2019, 12:07 PM IST
திரை பிரபலங்கள் சொகுசு கார்களுக்கு முழு வரி செலுத்தாததால் அரசின் வருவாய் பாதிப்பு: நீதிமன்றம் குற்றச்சாட்டு
சொகுசு கார்கள்
Web Desk | news18
Updated: September 13, 2019, 12:07 PM IST
இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள், வெளிநாட்டு சொகுசு கார்களுக்கு முழு வரியும் செலுத்தாமல் பதிவு செய்வதால் அரசின் வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாக, உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

இங்கிலாந்தில் இருந்து வாங்கி வந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை பதிவு செய்ய கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு உத்தரவிடக் கோரி பிரபல திரைப்பட இயக்குனர் ஷங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2012-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

காருக்கு 1.72 கோடி ரூபாய் சுங்கக் கட்டணம் செலுத்தியும், நுழைவு வரி செலுத்தி தடையில்லா சான்று பெற்றால் மட்டுமே பதிவு செய்ய முடியும் என ஆர்.டி.ஓ., மறுத்து விட்டதாக அவர் மனுவில் கூறியிருந்தார்.


வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு நுழைவு வரி செலுத்த தேவையில்லை என சென்னை உயர் நீதிமன்றமும், கேரளா உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளதாக மனுவில் சுட்டிக் காட்டியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், முதல் கட்டமாக 15 விழுக்காடு நுழைவு வரியை செலுத்தி, காரை பதிவு செய்து கொள்ள இயக்குநர் ஷங்கருக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர், 44 லட்சம் ரூபாய் நுழைவு வரி செலுத்த வேண்டியுள்ள நிலையில், இயக்குநர் ஷங்கர் 6 லட்சத்து 70,000 ரூபாய் மட்டுமே செலுத்தி தனது காரை பதிவு செய்துள்ளதாக கூறினார்.

Loading...

இதுபோல பல திரையுலக பிரபலங்கள், வெளிநாட்டு சொகுசு கார்களுக்கு முழு வரியும் செலுத்தாமல் பதிவு செய்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதனால் அரசின் வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு கூறியது. இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெறுகிறது.

Also see...

First published: September 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...