Home /News /entertainment /

சங்கத்திலிருந்து உங்களை ஏன் நீக்க கூடாது? என நடிகர் கே.பாக்யராஜுக்கு நடிகர் சங்கம் கடிதம்!

சங்கத்திலிருந்து உங்களை ஏன் நீக்க கூடாது? என நடிகர் கே.பாக்யராஜுக்கு நடிகர் சங்கம் கடிதம்!

கே, பாக்யராஜ்

கே, பாக்யராஜ்

15 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என  கடிதம் அனுப்பி உள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சங்கத்தில் இருந்து நடிகர் கே.பாக்யராஜுக்கு Show Cause நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தேர்தல் நடைபெற்றது.  அதில் நாசர் தலைமையில் பாண்டவர் அணியினரும், கே.பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியினரும்  போட்டியிட்டனர்.  சங்கரதாசாணியினர் ஐசரி கணேசனின் தூண்டுதலின் பேரில் போட்டியிட்டதாக கூறப்பட்டது. மேலும் தேர்தலை நடத்தக் கூடாது என சில உறுப்பினர்களால்  வழக்குகள் தொடரப்பட்டன. இருந்தாலும் 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.  ஆனாலும் அந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கையை நடத்தக் கூடாது என உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.  இதனால் இரண்டரை ஆண்டுகள் வாக்குகள் எண்ணப்படாமல் இருந்தன.

விஜய் டிவி சீரியல் பிரபலத்தின் அக்கா அந்த நடிகையா? ஆச்சரியப்படும் ரசிகர்கள்!

இந்த நிலையில் கடந்த மார்ச் 20ஆம் தேதி நடிகர் சங்கத்தின் வாக்குகள் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி எண்ணப்பட்டன. அதில் நாசர் தலைமையிலான அணியினர் வெற்றியடைந்தனர்.  இந்த நிலையில் தேர்தலில் வெற்றியடைந்து நாசர் விஷால், கார்த்தி உள்ளிட்ட பாண்டவர் அணியினர் பதவியேற்றுக்கொண்டனர். இந்த நிலையில் நடிகர் சங்கத்தில் சார்பில் நடிகர் கே.பாக்யராஜ்க்கு Show Cause நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் குறித்து பொய்யான,  உண்மைக்கு புறம்பான கருத்துக்களை நடிகர் சங்கத்துடைய உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் பரப்பி வருகிறார்கள்.  காழ்ப்புணர்ச்சி காரணமாக, சில உறுப்பினர்களின் தூண்டுதல் பெயரில் நடிகர் சங்கத்தின் பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் மீது சமூக அந்தஸ்தை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு செயலை செய்துள்ளீர்கள். மேலும் சட்ட விதிகளுக்கு எதிராக இதை செய்திருக்கிறீர்கள். சங்க உறுப்பினர்கள் சிலர் தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பி உள்ளனர். இது குறித்து செயற்குழுவில் முடிவெடுத்து சங்க உறுப்பினர் பதவியில்  இருந்து உங்களை ஏன் நீக்க கூடாது என விளக்கம் பெற முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் உங்களை சங்கத்திலிருந்து உங்களை ஏன் நீக்க கூடாது என விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்படுகிறது. 15 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என  கடிதம் அனுப்பி உள்ளனர்.

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு: சொத்து விவரங்களை தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு உத்தரவு!

அதேபோல் நடிகர் சங்கத்தின் முன்னால் செயற்குழு உறுப்பினர் ஏ.எல்.உதயாவிற்கும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளனர்.  இவர்கள் இருவரையும் சங்க உறுப்பினரிலிருந்து ஏன் நீக்க கூடாது என்ற கடிதம் அனுப்ப ஜூன் 30-ம் தேதி நடைபெற்ற செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை இருவருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கடிதம் வாயிலாகவோ அல்லது செயற்குழுவிலோ விளக்கம் அளிக்கலாம் அவர்கள் விளக்கம் ஏற்றுக்கொள்ளப்படாத பட்சத்தில் இருவரும் சங்கத்தில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது.

தென்னிந்திய சங்க விதி 13-ன் படி சங்கத்திற்கு எதிராக உறுப்பினர்கள் யாரும் செய்தி வாயிலாகவோ அல்லது உறுப்பினர்களுக்கு கடிதம் வாயிலாகவோ கருத்து சொல்ல கூடாது என விதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அனுப்பப்பட்ட கடிதம் பொதுச் செயலாளர் கையெழுத்துடன் அனுப்பப்பட்டுள்ளது. தலைவர் கையெழுத்துடன் அனுப்பப்பட்டால் அந்த உறுப்பினர் நீக்கப்பட்டதாக கருதப்படும். ஆனால் பொதுச் செயலாளர் கையெழுத்துடன் அனுப்பப்பட்டால் உறுப்பினரின் விளக்கம் ஏற்கப்பட வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sreeja
First published:

Tags: Director Bhagyaraj, Kollywood, Nadigar Sangam, Tamil Cinema

அடுத்த செய்தி