விஜய் படத்துக்கு தமிழக அரசு இலவச விளம்பரம் - நடிகை கஸ்தூரி பரபரப்பு கருத்து

விஜய் படத்துக்கு தமிழக அரசு இலவச விளம்பரம் - நடிகை கஸ்தூரி பரபரப்பு கருத்து
பிகில்
  • News18
  • Last Updated: September 24, 2019, 4:25 PM IST
  • Share this:
விஜய்யின் பிகில் படத்துக்கு தமிழக அரசு இலவச விளம்பரம் செய்ய ஆரம்பித்துவிட்டதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

அட்லீ - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் அப்பா - மகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, யோகிபாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, விவேக், ஜாக்கி ஷெரஃப் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.


தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த 19-ம் தேதி சென்னை தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய், பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குடுமபத்துக்கு ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,  அரசியல்ல புகுந்து விளையாடுங்க.. ஆனா விளையாட்டுல அரசியல கொண்டு வராதீங்க என்று ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்த விஜய் குட்டிக் கதை ஒன்றையும் கூறினார். கதையின் இறுதியில், எவனை எங்க உக்கார வெக்கணும்னு திறமையை வைத்து முடிவு பண்ணுங்க என்றார்.

Loading...

விஜயின் இந்தப் பேச்சுக்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன.



இந்நிலையில் தற்போது பிகில் இசைவெளியீட்டு விழாவுக்கு எந்த அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் அனுமதி வழங்கியது என்று தமிழக அரசின் உயர்கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து பதிவிட்டிருக்கும் நடிகை கஸ்தூரி, “தமிழக அரசு பிகில் படத்துக்கான இலவச விளம்பரத்தை ஆரம்பித்து விட்டதாக” கூறியுள்ளார்.

வீடியோ பார்க்க: எந்த அடிப்படையில் பிகில் இசை வெளியீட்டு விழாவிற்கு அனுமதி?
First published: September 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...