நவ.10 முதல் தியேட்டர்களை திறக்க அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு

நவம்பர் 10-ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

நவ.10 முதல் தியேட்டர்களை திறக்க அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு
தியேட்டர்
  • Share this:
கொரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதத்திலிருந்து திரையரங்குகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் உள்ளிட்டோர் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்தனர்.

மேலும் திரையரங்கு ஊழியர்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர்.இதையடுத்து மத்திய அரசு அக்டோபர் 15-ம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் திரையரங்கை திறக்க உத்தரவிட்டது. எனவே தமிழகம் தவிர்த்து பல்வேறு மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. தமிழகத்திலும் தியேட்டர்களை திறக்க வேண்டும் என அதன் உரிமையாளர்கள் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்திருந்தனர்.

மேலும் படிக்க: நவம்பர் 1 முதல் எவற்றுக்கெல்லாம் அனுமதி? முக்கிய 10 தகவல்கள்


இந்நிலையில் தற்போது மேலும் ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் நவம்பர் 10-ம் தேதி முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்கை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசின் இந்த அறிவிப்பு திரையரங்குக்குச் செல்பவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தியேட்டர்கள் திறக்கப்பட்டால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக வாய்ப்பிருக்கிறது.

 ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்


First published: October 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading