ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விஜய்யின் வாரிசு பட சிக்கலுக்கு உதயநிதியை குற்றம்சாட்டும் முன்னாள் அமைச்சர்… உண்மை நிலவரம் என்ன?

விஜய்யின் வாரிசு பட சிக்கலுக்கு உதயநிதியை குற்றம்சாட்டும் முன்னாள் அமைச்சர்… உண்மை நிலவரம் என்ன?

விஜய் - உதயநிதி

விஜய் - உதயநிதி

விஜய்யின் வாரிசு படத்தின் ரிலீஸுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  விஜய்யின் வாரிசு படத்துக்கான சிக்கலுக்கு உதயநிதி ஸ்டாலின் தான் காரணம் என்று குற்றஞ்சாட்டியுள்ளார் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ. சினிமா வட்டாரம் சொல்வதென்ன.. இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

  வெள்ளம் பாதிப்பு, கால்பந்து வீராங்கனை மரணம் என மக்களை கலங்க வைத்த அனைத்தையும் மறக்க வைத்திருக்கிறது விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்பட விவகாரம். விஜய் படங்கள் வெளியீட்டின் போது சிக்கலை சந்திப்பதென்பது இது முதல் முறையல்ல. காவலன் படத்தில் தொடங்கி, துப்பாக்கி, கத்தி, தலைவா, தெறி, மெர்சல், சர்க்கார், பிகில் என கடந்த 10 ஆண்டுகளில் வெளிவந்த அவரது பெரும்பாலான படங்கள் இதுபோன்ற சர்ச்சைகளை கடந்தே திரைக்கு வந்திருக்கின்றன.

  சர்ச்சைக்குரிய வகையில் பேச்சு, தயாரிப்பாளர்கள் இடையே சம்பள பாக்கி, கதை திருட்டு, அரசின் மீது விமர்சனம்.... இப்படி ஏதேனும் ஒன்று கடந்த காலங்களில் விஜய் பட வெளியீட்டின் போது சிக்கலுக்கு வழிவகுத்தன. ஆனால், இப்போது சொல்லப்படுகிற காரணமே வேறு. அதுவும் சொன்னவர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ என்பது தான் இதில் கவனிக்க வேண்டிய விஷயமே.....

  வாரிசு படத்தின் தெலுங்கு வெளியீட்டில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு உதயநிதி ஸ்டாலினே காரணம் என்றும்,  தமிழ்நாட்டில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் மட்டுமே படங்களை திரையிட முடியும் என்கிற நிலை உள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் கடம்பூர் ராஜூ.

  இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழந்த பிரபல நடிகை… பின்னணி காரணங்கள் என்ன?

  இது தொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள நடிகர் சந்தானம், நம் படங்களுக்கு நாம் முக்கியத்துவம் தருவது போன்று ஒவ்வொரு மொழியில் வெளியாகும் படங்களுக்கும் அவரவர் முக்கியம் கொடுப்பதாக நியூஸ் 18 தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

  வாரிசு படத்துக்கு இயக்குநர்கள் லிங்குசாமி, பேரரசு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என ஆதரவும் வரிசைக்கட்டுகிறது. எனினும், பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக முடிவெடிப்போம் என்று தெரிவித்துள்ள தயாரிப்பாளர்கள், மொழிப் பிரச்னையாக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த விவகாரத்தில் தமிழ் கலைஞர்கள் குழு அமைத்து ஆந்திரா திரைக்கலைஞர்களுடன் பேச வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

  துணிவு படத்தை வெளிநாடுகளில் ரிலீஸ் செய்யும் ‘லைகா’ – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

  ஆனால், இந்த பிரச்னைக்கே படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜூதான் காரணம் என்கின்றனர் ஒருசாரார்...  2019ம் ஆண்டு பேட்ட படத்தின் தெலுங்கு பதிப்பை பிரசன்னகுமார் வெளியிட்ட போது, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் தெலுங்கு படங்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்கிற விதியை தில் ராஜூ உள்ளிட்டோர் தான் கொண்டுவந்தனர் என்கிறது சினிமா வட்டாரம். ஆனால், உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் வாரிசு தெலுங்கு பதிப்பு ரிலீஸ் பகாரணம் என்று சாடியியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ.

  வசூல் சாதனை நிகழ்த்திய மெர்சல், பிகில் உள்ளிட்ட பல படங்கள் இதுபோன்ற சர்ச்சைகளை கடந்தே சாதனைகளை நிகழ்த்தின. அந்த வரிசையில் வாரிசும் இடம்பெறும் என்கின்றனர் ரசிகர்கள். பொறுத்திருந்து பார்க்கலாம்.

  Published by:Musthak
  First published:

  Tags: Actor Vijay, Udhayanidhi Stalin