Jayam Ravi: 'இந்த வருஷம் நல்ல ஆட்சி வரணும்ன்னு ஆசைப்படுறேன்’ - ஜெயம் ரவி

Jayam Ravi: 'இந்த வருஷம் நல்ல ஆட்சி வரணும்ன்னு ஆசைப்படுறேன்’ - ஜெயம் ரவி

ஜெயம் ரவி

இந்த வருடம் நல்லாட்சி வரவேண்டும் என மற்றவர்களைப் போல் தானும் ஆசைப்படுவதாக வாக்களித்தப்பின் நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    இந்த வருடம் நல்லாட்சி வரவேண்டும் என மற்றவர்களைப் போல் தானும் ஆசைப்படுவதாக வாக்களித்தப்பின் நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

    ஒரே கட்டமாக இன்று தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத முதல் சட்டமன்ற தேர்தலை இருபெறும் திராவிட கட்சிகளான திமுக-வும், அதிமுக-வும் எதிர்கொள்கிறது. 10 ஆண்டுகால ஆட்சியை தக்க வைக்க அதிமுக-வும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க 10 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லாத திமுக-வும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    தவிர அமமுக - தேமுதிக, மநீம - சமக, நாதக என இத்தேர்தலில் ஐந்து முனை போட்டி நிலவுகிறது. அதிமுக கூட்டணியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக கூட்டணி சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக கூட்டணி தரப்பில் டிடிவி தினகரன், மநீம கூட்டணி சார்பாக கமல் ஹாசனும், நாதக தரப்பில் சீமானும் முதல்வர் வேட்பாளராக களத்தில் உள்ளனர்.

    இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் அரசியல் மற்றும் திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் ஆர்வமுடன் வாக்களித்தனர். இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் 2021-ல் வாக்களித்த நடிகர் ஜெயம் ரவி செய்தியாளர்களிடம், “இந்த வருஷம் நல்ல ஒரு ஆட்சி வரணும்ன்னு உங்கள மாதிரியே நானும் ஆசைப்படுறேன். அதுக்காக தான் என்னோட உரிமையோட ஓட்டு போட்டுருக்கேன். இங்க எல்லாம் பாதுகாப்பா இருக்கு, அதனால மாஸ்க் போட்டுட்டு வந்து நீங்களும் ஓட்டு போடுங்க. இது நம்மளோட கடமை” என்றார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: