TN Assembly Election: வீட்டிலிருந்து வாக்குச்சாவடி வரை நடந்தே வந்து வாக்களித்த விக்ரம்!

TN Assembly Election: வீட்டிலிருந்து வாக்குச்சாவடி வரை நடந்தே வந்து வாக்களித்த விக்ரம்!

நடிகர் விக்ரம்

பெசண்ட் நகரிலுள்ள தனது வீட்டிலிருந்து வாக்குச்சாவடி வரை நடந்தே சென்று வாக்களித்திருக்கிறார் நடிகர் விக்ரம்.

  • Share this:
    பெசண்ட் நகரிலுள்ள தனது வீட்டிலிருந்து வாக்குச்சாவடி வரை நடந்தே சென்று வாக்களித்திருக்கிறார் நடிகர் விக்ரம்.

    தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைப்பெறுகிறது. முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத முதல் சட்டமன்ற தேர்தலை இருபெறும் திராவிட கட்சிகளான திமுக-வும், அதிமுக-வும் எதிர்கொள்கிறது. 10 ஆண்டுகால ஆட்சியை தக்க வைக்க அதிமுக-வும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க 10 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லாத திமுக-வும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    தவிர அமமுக - தேமுதிக, மநீம - சமக, நாதக என இத்தேர்தலில் ஐந்து முனை போட்டி நிலவுகிறது. அதிமுக கூட்டணியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக கூட்டணி சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக கூட்டணி தரப்பில் டிடிவி தினகரன், மநீம கூட்டணி சார்பாக கமல் ஹாசனும், நாதக தரப்பில் சீமானும் முதல்வர் வேட்பாளராக களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் நடிகர்கள் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் தங்கள் வாக்குகளை செலுத்தினர். குறிப்பாக விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இதற்கிடையே நடிகர் விக்ரம் பெசண்ட் நகரிலுள்ள தனது வீட்டிலிருந்து வாக்குச்சாவடி மையம் வரை நடந்து சென்று வாக்களித்தார். விஜய்யும், விக்ரமும் பெட்ரோல் விலை உயர்வை சுட்டிக்காட்ட தான், இப்படி செய்தார்களோ என இணையத்தில் அவரது ரசிகர்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: