பவன் கல்யாண் வைத்த கோரிக்கை - அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய தமிழக முதல்வர்

பவன் கல்யாண் வைத்த கோரிக்கை - அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய தமிழக முதல்வர்
தமிழக முதல்வர் | நடிகர் பவன் கல்யாண்
  • Share this:
ஆந்திர மீனவர்களுக்கு உதவுமாறு பவன் கல்யாண் வைத்த கோரிக்கைக்கு தமிழக முதல்வர் பதிலளித்துள்ளார்.

கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் மாநிலம் விட்டு மாநிலம் பயணம் செய்ய முடியாத நிலை நீடிக்கிறது. இந்நிலையில் நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் தமிழக முதல்வருக்கு கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார்.

அதில், ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் சோமபேட்டா மண்டலத்தின் கோலகண்டி கிராமத்தைச் சேர்ந்த 99 மீனவர்கள், கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னை துறைமுகத்தில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களுக்கு தேவையான உணவோ, தங்குமிட வசதியோ இன்றி தவித்து வருகின்றனர். எனவே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை எடுத்து, அவர்களுக்குப் போதுமான இடவசதி மற்றும் உணவு ஏற்பாடு செய்து, அவர்களை ஊருக்கு அனுப்பி வைக்கும்படி கோரிக்கை விடுத்தார்.


மேலும் ஸ்ரீகாகுளம் மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து மேற்கண்ட தகவலையும் அந்த 99 மீனவர்கள் பற்றிய தகவல்களை அந்தக் கவலையுற்ற மீனவக் குடும்பங்களுக்கு உடனே தெரிவிக்கும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்றும் பவன் கல்யாண் தனது அறிக்கையில் கூறியிருந்தார்.

இந்நிலையில் பவன் கல்யாணின் இந்தக் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பதிலளித்துள்ளார். அவரது பதிவில், “இதுகுறித்து உடனடியாக செயல்படுமாறு சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவித்துள்ளேன். நாங்கள் அவர்களைக் கவனித்துக் கொள்வோம்” என்று கூறப்பட்டுள்ளது.இதையடுத்து தனது அடுத்த பதிவில், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்டவற்றை அதிகாரிகள் வழங்கியிருப்பதாகவும், தற்போது அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களது குடும்பத்தினர் கவலை கொள்ள வேண்டாம் என்றும் தமிழக முதல்வர் கூறியுள்ளார்.இதனை அடுத்து, தமிழக முதல்வருக்கு பவன் கல்யாண் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: உங்களைப் போன்றவர்களால் அஜித்துக்கு அசிங்கம் - குஷ்பு குமுறல்

First published: March 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading