தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு இன்று நடத்தப்பட்ட தேர்தலில் தலைவர் பொறுப்புக்கு ஆர்.கே. செல்வமணி தேர்வாகியுள்ளார்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் நிறைவடைவதையொட்டி, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த மாதம் 24-ம்தேதி நடைபெறவிருந்தது. அப்போது கொரோனா பரவல் காரணமாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு இன்று கேகே நகரில் உள்ள தனியார் பள்ளியில் நடத்தப்பட்டது.
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் மொத்தம் 2600 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுப்போடும் உறுப்பினர்களாக சுமார் 1900 பேர் உள்ளனர். இன்று நடத்தப்பட்ட தேர்தலில் 100 தபால் ஓட்டுகள் உள்பட மொத்தம் 1520 வாக்குகள் பதிவாகின.
இதையும் படிங்க -
3 நாட்களில் ரூ. 100 கோடி... வசூல் மழையில் வலிமை
இந்த தேர்தலில் ஆர்.கே.செல்வமணி தலைவராக போட்டியிடும் அணியில், செயலாளராக ஆர்.வி.உதயகுமார், பொருளாளராக பேரரசு, இணை செயலாளர்களாக சுந்தர்.சி, முருகதாஸ், லிங்குசாமி, ஏகம்பவாணன், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ரமேஷ்கண்ணா, மனோஜ்குமார், மனோபாலா, சரண் , திருமலை, ஏ.வெங்கடேஷ், ரவிமரியா, ஆர்.கண்ணன், முத்து வடுகு, நம்பி, ரமேஷ் பிரபாகர், கிளாரா உட்பட 19 பேர் போட்டியிட்டனர்.
இதையும் படிங்க -
ஹோமில் தங்கிப் படிக்கும் 150 குழந்தைகளை தியேட்டருக்கு அழைத்துச் சென்ற அஜித் ரசிகர்கள்- வலிமை பார்த்து உற்சாகம்
இன்னொரு தரப்பில், கே.பாக்யராஜ் தலைவராக போட்டியிடும் அணியில், செயலாளர் பதவிக்கு ஆர்.பார்த்திபன், பொருளாளர் பதவிக்கு வெங்கட்பிரபு போட்டியிட்டனர். இணைச்செயலாளர்கள் பதவிக்கு ராஜா கார்த்திக், விருமாண்டி, ஜெகதீசன், ஜெனிபர் ஜூலியட் ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஆர்.பாண்டியராஜன், மங்கை அரிராஜன், வேல்முருகன், சசி, பாலசேகர், வி.பிரபாகர், சாய்ரமணி, நவீன், சிபி, நாகேந்திரன், ஜெகன் ஆகியோர்களையும் சேர்த்து மொத்தம் 19 பேர் போட்டியிட்டனர்.
தலைவர் பதவிக்கு பதிவான வாக்கு எண்ணிக்கையின்போது பதிவான வாக்குகளில் பாதிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஆர்.கே. செல்வமணி வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு திரைத்தறையினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.