Home » News » Entertainment » CINEMA TN BJP PLANS TO ATTRACT CINEMA CELEBRITIES RIZ

அண்ணாமலையைக் கொண்டு சினிமா பிரபலங்களை ஈர்க்க தமிழக பாஜக திட்டம்?

நடிகர் விஷால் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மேலும் சில தமிழ் சினிமா பிரபலங்களையும் அக்கட்சி ஈர்க்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

அண்ணாமலையைக் கொண்டு சினிமா பிரபலங்களை ஈர்க்க தமிழக பாஜக திட்டம்?
அண்ணாமலை
  • News18 Tamil
  • Last Updated: September 14, 2020, 8:34 PM IST
  • Share this:
மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக தமிழகத்தில் வலுப்பெற பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக பிரபலமான பலரையும் ஈர்த்து வரும் பாஜகவின் பார்வை தற்போது திரைத்துறையின் மீது திரும்பியுள்ளது.

தமிழக பிரபலங்களை பாஜக நோக்கி ஈர்க்கும் பொறுப்பு அக்கட்சியின் மாநில துணைத்தலைவரான அண்ணாமலையிடம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் ஒருபகுதியாக நடிகர்கள் விஷால் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோருக்கு அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளதாகவும், விரைவில் இருவரும் பாஜகவில் இணைய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால் தனது நண்பர் என்ற முறையிலேயே அண்ணாமலை தன்னை சந்தித்ததாக நடிகர் சமுத்திரக்கனி விளக்கம் அளித்துள்ளார். அதேநேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினமான செப்டம்பர் 17ம் தேதி விஷால் பாஜகவில் இணைவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


Also read: கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகை எவ்வளவு?

திரையுலக பிரபலங்களை பாஜகவில் இணைக்கும் முயற்சிகள் கடந்த சில ஆண்டுகளாகவே நடைபெற்று வருகின்றன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய இணை அமைச்சராகவும் திமுகவில் பணியாற்றிய நெப்போலியன் முதல்முதலில் பாஜக அழைப்பை ஏற்று அக்கட்சியில் இணைந்தார். இதையடுத்து பாஜகவில் இணைந்த இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரனை அக்கட்சி, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வேட்பாளராக களமிறக்கியது.



ஆனால் பணப்பட்டுவாடா விவகாரத்தால் அந்த தேர்தல் ரத்தாகி, மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது போட்டியிடுவதை கங்கை அமரன் தவிர்த்துவிட்டார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கங்கை அமரன், தான் விரும்பியே அக்கட்சியில் இணைந்ததாகவும், ராமர் கோவில் உள்ளிட்ட விவகாரங்களில் பாஜகவின் நிலைபாட்டை தான் ஆதரிப்பதாகவும் கூறியுள்ளார்.அண்மையில் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா தமிழகம் வந்தபோது, நடிகை நமீதா அக்கட்சியில் இணைந்தார். இயக்குநர்கள் பேரரசு, கஸ்தூரிராஜா, இசையமைப்பாளர் தீனா, நடிகர்கள் ஆர்.கே.சுரேஷ், காயத்ரி ரகுராம் உள்ளிட்டோரும் பாஜகவில் இணைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் பிரதமர் மோடியின் செயல்பாடுகளால் தாங்கள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், விஷால் பாஜகவில் இணைவது குறித்து அவரது விளக்கத்தை பெற முயற்சித்தபோது தொடர்புகொள்ள முடியவில்லை.
First published: September 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading