'மாநில சுயாட்சியை மீட்டெடுக்க வாக்களித்தேன்' - இயக்குநர் அமீர்

'மாநில சுயாட்சியை மீட்டெடுக்க வாக்களித்தேன்' - இயக்குநர் அமீர்

இயக்குநர் அமீர்

மாநில சுயாட்சியை மீட்டெடுக்க தான் வாக்களித்ததாக இயக்குநர் அமீர் வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

  • Share this:
    மாநில சுயாட்சியை மீட்டெடுக்க தான் வாக்களித்ததாக இயக்குநர் அமீர் வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

    தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைப்பெறுகிறது. முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத முதல் சட்டமன்ற தேர்தலை இருபெறும் திராவிட கட்சிகளான திமுக-வும், அதிமுக-வும் எதிர்கொள்கிறது. 10 ஆண்டுகால ஆட்சியை தக்க வைக்க அதிமுக-வும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க 10 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லாத திமுக-வும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    அதிமுக - பாஜக, திமுக - காங்கிரஸ், அமமுக - தேமுதிக, மநீம - சமக, ஆகியக் கட்சிகள் தங்கள் கூட்டணியுடனும் நாதக தனித்தும் இத்தேர்தலில் களம் காணுகின்றன. 234 தொகுதிகளிலும் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 6 கோடியே 2,67,446 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.



    இதையடுத்து இன்று காலை 7 மணிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. ரஜினி, கமல், சூர்யா, அஜித், விஜய் என முக்கிய திரைப்பிரபலங்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்களது வாக்கை செலுத்தினர். குறிப்பாக சைக்கிளில் வந்து வாக்களித்த விஜய், இணையத்தில் ட்ரெண்ட் ஆனார்.

    இந்நிலையில் பிரபல இயக்குநர் அமீர் வீடியோ பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “அன்பார்ந்த தமிழர்களே, மாநில சுயாட்சியை மீட்டெடுக்க, தமிழகத்தின் மாண்பையும், பெருமையையும் காத்திட நான் இன்றைக்கு வாக்களித்து விட்டேன். மறக்காமல் நீங்களும் வாக்களிக்க வேண்டுகிறேன். நன்றி” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: