Home /News /entertainment /

பிரதாப் போத்தன் மறைவுக்கு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை நேரில் அஞ்சலி

பிரதாப் போத்தன் மறைவுக்கு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை நேரில் அஞ்சலி

பிரதாப் போத்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் செல்வப் பெருந்தகை

பிரதாப் போத்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் செல்வப் பெருந்தகை

prathap pothen : பிரதாப் போத்தன் நடிப்பு மட்டுமல்லாமல் இயக்கத்திலும் முத்திரை பதித்தார். அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் 12 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

    நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன் மறைவுக்கு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

    வாழ்க்கை வாழ்வதற்கே அதை அனுபவிக்க வேண்டும் என்று பிரதாப் போத்தன் கூறுவார் என செல்வ பெருந்தொகை தெரிவித்துள்ளார்.

    நடிகர் பிரதாப் போத்தன்  மறைவுக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செல்வ பெருந்தொகை நேரில் அஞ்சலி செலுத்தினார்.  அதன் பின் பேசிய அவர், பிரதாப் போத்தனும், நானும் அருகருகில் வசிக்கிறோம். தினமும் நடைபயிற்சி செய்யும் பொழுது இருவரும் பேசிக் கொள்வோம்.  அவரின் அழியாத கோளங்கள், மூடுபனி படங்கள் பற்றி ஏராளமாக பேசியுள்ளேன்.  வாழ்க்கை வாழ்வதற்கே அதை அனுபவிக்க வேண்டும் என என்னிடம் கூறுவார்.

    Iravin Nizhal Making Video - இணையத்தில் வைரலகும் இரவின் நிழல் மேக்கிங் வீடியோ

    அவர் உடல் நலம் சரியில்லாமல் இருந்தார். இந்த நிலையில் இன்று அவரின் மறைவு செய்தியை தெரிந்து கொண்டபோது மிகவும் வருத்தமாக இருந்தது என செல்வபெருந்தொகை பேட்டி அளித்தார்.  அத்துடன் தன்னுடைய இரங்கலை அவருடைய மனைவி மற்றும் மகளிடம் தெரிவித்து வந்ததாகவும் கூறினார்.

    மலையாள சினிமாவில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் பிரதாப் போத்தன் இன்று காலை 8 மணி அளவில் தூக்கத்திலேயே காலமானார். அவரின் உடல் அஞ்சலிக்காக கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    பிரதாப் போத்தனின் முழு திறமையும் வெளி வராதது வருத்தம் - கமல்ஹாசன்

    தமிழ் சினிமா பிரபலங்கள் பிரதாப் போத்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதில் இந்திய சினிமாவின் பிரபல இயக்குநரான மணிரத்னம், முன்னணி ஒளிப்பதிவாளர்கள் பி.சி ஸ்ரீராம் மற்றும் ராஜூ மேனன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். அவர்கள் நீண்ட நேரம் பிரதாப் போத்தன் இல்லத்தில் இருந்து அஞ்சலி செலுத்தினர்.  பிரதாப் போத்தன் நடிப்பு மட்டுமல்லாமல் இயக்கத்திலும் முத்திரை பதித்தார்.

    அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் 12 திரைப்படங்களை இயக்கியுள்ளார். அதில் சீவலப்பேரி பாண்டி, வெற்றி விழா, லக்கி மேன், மை டியர் மார்த்தாண்டம் உள்ளிட்ட படங்கள் மிகவும் பிரபலமானவை.
    Published by:Musthak
    First published:

    Tags: Kollywood

    அடுத்த செய்தி