முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நாடாளுமன்றத்தில் பேசப்பட்ட ஷாரூக்கானின் ‘பதான்’ திரைப்படம்… வைரலாகும் வீடியோ

நாடாளுமன்றத்தில் பேசப்பட்ட ஷாரூக்கானின் ‘பதான்’ திரைப்படம்… வைரலாகும் வீடியோ

பதான்

பதான்

பதான் படம் வெளியாகுவதற்கு முன்னதாக பதான் படத்தை புறக்கணிக்க கோரி சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்யப்பட்டன

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஷாரூக்கான் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ள பதான் திரைப்படம் நாடாளுமன்றத்தில் இன்று பேசப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஷாரூக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆப்ரஹாம், சிறப்பு தோற்றத்தில் சல்மான் கான் உள்ளிட்டோர் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவான பதான் திரைப்படம் கடந்த மாதம் 25ஆம் தேதி வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது வரை ரூ. 850 கோடிக்கும் அதிகமாக இந்தப் படம் வசூலித்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த திரைப்படம் கே.ஜி.எஃப். 2 படத்தின் வசூலை நெருங்கும் என்று பாலிவுட் திரைத்துறையினர் எதிர்பார்த்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக த்ரிஷ்யம் 2 படத்தை தவிர்த்து இந்தியில் வெளிவந்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பதான் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு பாலிவுட்டிற்கு பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. படம் வெளியாகுவதற்கு முன்னதாக பதான் படத்தை புறக்கணிக்க கோரி சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்யப்பட்டன. ஆனால், இதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை என்பதை படத்தின் முடிவு வெளிப்படுத்துகிறது. இந்நிலையில், மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ ப்ரைன்,  பதான் படத்தை பாராட்டி நாடாளுமன்றத்தில் இன்று பேசியுள்ளார்.

அவர் பேசுகையில்,’பாலிவுட்டை புறக்கணிக்க வேண்டும் என்று சிலர் பிரசாரம் மேற்கொண்டனர். ஆனால், ஷாரூக்கானின் பதான் படத்தை ரசிகர்கள் வரவேற்று கொண்டாடியுள்ளனர். இந்த படத்தை கொடுத்த ஷாரூக்கான், இயக்குனர் சித்தார்த் ஆனந்த்-க்கு பாராட்டுகள். அவர்கள் சர்வதேசத்திற்கான இந்தியாவின் மிகப்பெரும் தூதர்கள்’ என்று தெரிவித்தார். இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

First published:

Tags: Shah rukh khan