யோகிபாபுவின் காண்டிராக்டர் நேசமணி படத்தின் தலைப்பை தற்போது பூமர் அங்கிள் என படக்குழு பெயர்மாற்றம் செய்துள்ளது.
2000-ம் ஆண்டில் வெளிவந்த ப்ரெண்ட்ஸ் படத்தில் இடம்பெற்ற காண்டிராக்டர் நேசமணியின் காமெடியை ரசிக்காத ரசிகர்கள் இல்லை. நம்ம பெயின்டிங் கான்ட்ராக்டர் நேசமணியும், அவரது லேபர்ஸ்-ம் அள்ளித்தெளித்த நகைச்சுவை காட்சிகளை நம்மால் மறக்கவே முடியாது.
காமெடியில் அசத்திய பெயின்டிங் கான்ட்ராக்டர் நேசமணி வாய மூடுறா குரங்கு, சள்ளி சள்ளியா நொறுக்கிட்டீங்களேடா, நீ புடுங்கரதெல்லாமே தேவையில்லாத ஆணிதான் என அடுக்கடுக்கான கான்ட்ராக்டர் நேசமணியின் வசனங்கள் மீம்ஸாகவும், போஸ்டாகவும் சமூக வலைத்தளங்களில் கலக்கியது.
இந்த நேசமணி நகைச்சுவை காட்சி பல ஆண்டுகள் கழித்து Pray_for_Neasamani என்னும் ஹேஷ்டேக் மூலம் உலகளவில் ட்ரெண்டாகியது.
இந்த நிலையில் ஃபிரண்ட்ஸ் படத்தில் இடம்பெற்ற நேசமணி படப்பெயராகவும் உருவானது. நடிகை ஓவியா, யோகி பாபு இணைந்து நடிக்கும் படத்துக்கு காண்டிராக்டர் நேசமணி எனப் பெயரிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அப்பெயரின் தலைப்பை பூமர் அங்கிள் என படக்குழு பெயர்மாற்றம் செய்துள்ளது.
Feeling elated to reveal the First Look of #BoomarUncle Wishing the entire team for a great success.
இதை தொடர்ந்து தற்போது காண்டிராக்டர் நேசமணி என்ற தலைப்பை தற்போது படக்குழு பூமர் அங்கிள் என்று மாற்றி உள்ளனர். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள படகுழு வடிவேலு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளதால் அதற்கு மதிப்பு அளிக்கும் விதமாக படத்தின் தலைப்பை பூமர் அங்க்ள் என்று மாற்றியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.