முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு

நடிகர் ஹரிஷ் கல்யாண்

நடிகர் ஹரிஷ் கல்யாண்

Actor Harish Kalyan : படத்திற்கு Dhibu Ninan Thomas இசையமைக்கிறார். அதேபோல் அதுல்யாரவி நாயகியாக நடிக்கிறார். டீசல் திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகிறது. 

  • Last Updated :

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் நன்றாக உள்ளதென அவரது ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையின் இளம் நாயகர்களில் ஒருவராக உள்ளவர் ஹரிஷ் கல்யாண். இவர் நடித்த ப்யார் பிரேமா காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

அதை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான தாராள பிரபு, Oh மனபெண்ணே ஆகிய  படங்களும் வெற்றி அடைந்தன.

பல்லாவரம் டூ பான் இந்தியா ஸ்டார்.. கோலிவுட், டோலிவுட்டில் கலக்கும் தமிழ் பெண் சமந்தா!

இந்த நிலையில் தற்போது அடங்காதே திரைப்படத்தின் இயக்குநர் சண்முகம்  முத்துசாமி இயக்கும் புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.  இந்த நிலையில் படத்தின் தலைப்பை அறிவித்துள்ளனர்.  ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு டீசல் என தலைப்பு வைத்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு Dhibu Ninan Thomas இசையமைக்கிறார். அதேபோல் அதுல்யாரவி நாயகியாக நடிக்கிறார்.

’என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறியே' - சத்யராஜின் திரைப்பயணம்!

top videos

    டீசல் திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகிறது.

    First published:

    Tags: Actor Harish kalyan