தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். அவருடைய படங்கள் வெளியாகும்போது தமிழ்நாடு திருவிழா கொண்டாட்டத்துக்கு தயாராவது வழக்கமான ஒன்றாகவே இருந்துவருகிறது. விஜயின் படங்கள் அதிகமாக பொங்கல்,
தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகி தமிழ்நாடு முழுவதும் வசூலை வாரிக் குவிக்கும். ஆனால், இந்தமுறை சாதாரண தினத்தில் பீஸ்ட் வெளியாகவுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். இந்தப் படம் வரும் 13-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்துக்கான முன் பதிவு கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியது. தொடங்கிய நாள் முதலே முன்பதிவு வேகமாக நடைபெற்றுவருகிறது. ரசிகர்களும் தீவிர கொண்டாட்டத்துக்கு தயாராகிவருகின்றன.
இந்த நிலையில், திருப்பூரில் ஒரு பின்னலாடை நிறுவனம் பீஸ்ட் பட வெளியீட்டுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. திருப்பூர் முதலிபாளையம் சிட்கோவில் செயல்பட்டு வரும் நிட் பிரைன் என்ற தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பீஸ்ட் திரைப்படத்தை காண விடுமுறை கேட்டு வந்த நிலையில் நிறுவனம் சார்பில் அனைவருக்கும் பீஸ்ட் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்து கொடுத்து, விடுமுறை அளித்துள்ளனர்.
புத்தாண்டை முன்னிட்டு 14ம் தேதி விடுமுறை அளித்திருந்த நிலையில் ஊழியர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஒரு நாள் முன்னதாக விடுமுறை அளித்து டிக்கெட் கொடுத்த பின்னலாடை நிறுவனம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
#AK61 Update - அஜித்தின் அடுத்த படத்தின் கதை இப்படித்தான் இருக்குமா?
இதுகுறித்து நிட் பிரைன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஏராளமான விடுமுறை விண்ணப்பம் வருவதைத் தவிர்ப்பதற்காக விஜயின் பீஸ்ட் படம் வெளியாவதை முன்னிட்டு ஏப்ரல் 13-ம் தேதி விடுமுறை அளிப்பதற்கு நாங்கள் முடிவு செய்துள்ளோம். பைரசியை தடுக்கும் நோக்கில் எங்களது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நாங்கள் இலவச டிக்கெட் வழங்குகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.