அமெரிக்காவில் நடைபெற்ற குறும்பட விழாவில் திருப்பூர் சிறுமிக்கு விருது!

60 நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் போட்டியிட்ட நிலையில், சிறுமி மகாஸ்வேதாவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: August 13, 2019, 10:50 AM IST
அமெரிக்காவில் நடைபெற்ற குறும்பட விழாவில் திருப்பூர் சிறுமிக்கு விருது!
மஹாஸ்வேதா
Web Desk | news18
Updated: August 13, 2019, 10:50 AM IST
செல்போனில் மூழ்கி இருக்கும் குழந்தைகள் மனநிலை குறித்து மலையாள மொழியில் குறும்படத்தை எடுத்து நடித்த திருப்பூர் சிறுமிக்கு அமெரிக்காவில் நடைபெற்ற குறும்படப் பிரிவில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது கிடைத்துள்ளது.

திருப்பூரில் ஆடிட்டராக பணிபுரிந்து வரும் கிருஷ்ணன் -கவிதா தம்பதியரின் மகள் மஹாஸ்வேதா. இவர் தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு திரைப்படங்கள் பார்ப்பதிலும் நடிப்பதிலும் மிகுந்த ஆர்வம் இருந்தது.

இதனால் தான் சேமித்து வைத்த ஒரு லட்ச ரூபாயில் குறும்படம் எடுக்க ஆசைப்பட்டு, ஆரோடு பறையும் என்ற மலையாள மொழியில் குறும்படத்தை தயாரித்தும் அதில் நடிக்கவும் செய்துள்ளார்.

கடந்த மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 60 நாடுகள் கலந்து கொண்ட குறும்படங்கள் விருது வழங்கும் விழாவில் பங்கேற்று லாஸ் ஏஞ்சல்ஸ் அவார்டை சிறுமி மஹாஸ்வேதா பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்த குறும்படத்தை இயக்குனர் சுஜித், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் நடைபெறும் திரைப்பட விழாவுக்கு அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலூம் படிக்க... ரஜினிக்கு ஆதரவும்... எதிர்ப்பும்...

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...