‘நீ சுடத்தான் வந்தியா’ ட்ரெய்லர்... கவர்ச்சியின் உச்சத்தில் டிக் டாக் இலக்கியா

‘நீ சுடத்தான் வந்தியா’ ட்ரெய்லர்... கவர்ச்சியின் உச்சத்தில் டிக் டாக் இலக்கியா

டிக் டாக் இலக்கியா

டிக் டாக் பிரபலம் இலக்கியா நடித்திருக்கும் ‘நீ சுடத்தான் வந்தியா’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

  • Share this:
ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் 'டிக் டாக்' புகழ் இலக்கியா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நீ சுடத்தான் வந்தியா'. இத்திரைப்படத்தை தயாரித்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார் அருண் குமார். மேலும் விஜய் டிவி தங்கதுரை, கொட்டாச்சி, நெல்லை சிவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய இலக்கியா, “இந்த மேடை எனது கனவு மேடை. சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் கனவு. அது இப்போது நிறைவேறி இருக்கிறது. என்னை அனைவரும் ஆதரிக்க வேண்டும். உண்மையில் படம் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை இருந்ததே தவிர படப்பிடிப்பில்தான் அது எவ்வளவு சிரமம் என்று புரிந்தது.

படக்குழுவில் இயக்குநர் சொல்லிக் கொடுத்தார். பலரும் நடிப்பு அனுபவம் இல்லாத என்னைப் புரிந்து கொண்டு உதவினார்கள். ஒருவழியாக பிறகுதான் மெல்ல மெல்ல நம்பிக்கை வந்து நடிக்க ஆரம்பித்தேன். சினிமா எவ்வளவு சிரமம் என்பதை தெரிந்து கொண்டேன். நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அனைவரும் இந்தப் படத்தை ஆதரிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.



இந்நிலையில் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் காட்சிக்கு காட்சி உச்சகட்ட கவர்ச்சியில் தோன்றியுள்ளார் டிக் டாக் இலக்கியா. அடல்ட் ஹாரர் ஜானரில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது படக்குழு.
Published by:Sheik Hanifah
First published: