TikTok Elakkiya: என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு டிக் டாக் இலக்கியா கவர்ச்சி நடனம்

TikTok Elakkiya: என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு டிக் டாக் இலக்கியா கவர்ச்சி நடனம்

டிக் டாக் இலக்கியா

’என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு டிக் டாக் இலக்கியா ஆடிய கவர்ச்சி நடனம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Share this:
    ’என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு டிக் டாக் இலக்கியா ஆடிய கவர்ச்சி நடனம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் பாடல் ‘என்ஜாய் எஞ்சாமி’. இதனை பாடகி தீ மற்றும் ராப் பாடகர் அறிவு இருவரும் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது.




    இதுவரை இல்லாத அளவுக்கு சுயதீன ஆல்பமான ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் வெளியான 3 வாரங்களில் யூ-ட்யூபில் 76 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. பல பிரபலங்கள் இந்தப் பாடலுக்கு நடனமாடி, அந்த வீடியோவை தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.




    இந்நிலையில் டிக் டாக்கில் தனது கவர்ச்சி வீடியோக்கள் மூலம் பிரபலமான இலக்கியாவும் ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு நடனமாடியிருகிறார். பொதுவாகவே புகைப்படம் முதல் வீடியோக்கள் வரை எல்லாவற்றிலும் கவர்ச்சியுடன் காட்சியளிப்பார் இலக்கியா. அதே மாதிரி தான் ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் நடனமும். இந்தப் பாடலுக்கு இவ்வளவு கவர்ச்சி தேவைதானா என்ற ரீதியிலான கேள்விகளும் கமெண்டுகளில் தென்படுகின்றன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: