தனது பெயரில் போலி ஐடி உருவாக்கி பண மோசடி - டிக் டாக் பிரபலம் இலக்கியா போலீசில் புகார்!

தனது பெயரில் போலி ஐடி உருவாக்கி பண மோசடி - டிக் டாக் பிரபலம் இலக்கியா போலீசில் புகார்!
இலக்கியா
  • Share this:
டிக் டாக்கில் உள்ள தன்னுடைய புகைப்படம் மற்றும் வீடியோக்களைப் பயன்படுத்தி போலி ஐடி மூலம் பண மோசடி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை புகார் அளித்துள்ளார்.

சென்னையில் பிரபலமான ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அலுவலகத்தில் பணியாற்றிவருகிறார் இலக்கியா.

2018-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவின் கவர்ச்சி பாடல்களை மட்டும் தேர்வு செய்து அந்தப் பாடலுக்கு உணர்ச்சிப்பூர்வமாக நடித்து டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு வரும் இலக்கியா டிக்டாக்கில் கணக்கு தொடங்கிய சில மாதங்களிலேயே அதில் பிரபலமானார்.


ஆயிரணக்கான லைக்குகளுக்கு ஆசைப்பட்ட இலக்கியாவுக்கு, இப்போது லட்சணக்கக்கில் லைக்குள் குவிந்துவருகின்றன. எல்லா வகையான மது பாட்டில்களுடனும் இலக்கியா வெளியிட்டுள்ள டிக்டாக் வீடியோக்கள் மிகவும் பிரபலம். டிக்டாக்குகளில் பிரபலமாகிய இலக்கியாவின் பெயரில், சிலர் போலி கணக்குகளை தொடங்கி மோசடி செய்யவும் ஆரம்பித்தனர்.

இலக்கியாவுடன் டிக்டாக் வீடியோ பதிவு செய்யலாம், அதற்கு 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என சிலர் பேடிஎம், கூகுல் பே ஆகிய செயலி மூலம் பணம் வசூலிக்க ஆரம்பித்துள்ளர். இந்த விளம்பரம் உண்மை என்று கருதிய பலர், 5 ஆயிரம் ரூபாயை அனுப்பிவிட்டு காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு, சில நாட்களுக்கு பிறகு இது மோசடி என்பதை உணர்ந்தனர். நண்பர்கள் மூலம் இந்த மோசடி நடந்ததை அறிந்துகொண்ட இலக்கியா, உடனடியாக எச்சரிக்கை வீடியோவை பதிவு செய்தார்.

மோசடி கும்பல் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும் இலக்கியா புகார் அளித்துள்ளார். மேலும் டிக்டாக்கில் ரகரகமாக வீடியோக்களை வெளியிடுவது எனது விருப்பம் என்றும், யாரும் என்னை கட்டுப்படுத்த முடியாது என்றும் இலக்கியா விளக்கம் அளித்துள்ளார்.

நல்ல நோக்குடன் டிக்டாக்கில் இறங்கிய பலருக்கு வாய்ப்புகளை இந்த செயலி உருவாக்கிக்கொடுத்துள்ளது. அதேசமயம், தவறான நோக்கில் இந்த செயலியில் கணக்கு தொடங்கியவர்கள், ஆபத்தில் சிக்கி, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: பிக்பாஸ் சீசன் 4 ... தொகுப்பாளராகும் சூப்பர் ஸ்டார் - முதலாவதாக வந்த அப்டேட்!


First published: March 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading