சாகசமான முறையில் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்ட துப்பாக்கி வில்லன்!

வித்யுத் ஜம்வால்

ஆக்ராவில் செப்டம்பர் 1-ஆம் தேதி தனக்கும் நந்திதாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததை வித்யுத் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார்.

 • Share this:
  துப்பாக்கி பட வில்லன் வித்யுத் ஜம்வால் சாகசமாக நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டுள்ளார்.

  நடிகர் வித்யுத் ஜம்வால் பாலிவுட்டில் குறிப்பிடத்தக்க ஆக்‌ஷன் ஹீரோ. 'துப்பாக்கி' படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்த பிறகு, தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர். இதையடுத்து 'அஞ்சான்' படத்தில் சூர்யாவின் நண்பராக நடித்தார்.

  இவர் சமீபத்தில் இளம் பெண் ஒருவருடன் கைகோர்த்துக் கொண்டு, தாஜ்மகாலில் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவர்களின் விரல்களில் இருந்த மோதிரத்தைப் பார்த்து வித்யுத் ஜம்வாலுக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக யூகங்கள் கிளம்பின.

  படத்தில் இருந்த பெண் நந்திதா மஹ்தானி, ஆடை வடிவமைப்பாளர். அவருடன் வித்யுத் ஜாம்வால் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக தெரிகிறது. இருவரும் எப்போதும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் தொடர்பில் இருக்கிறார்கள். இதையடுத்து ஆக்ராவில் செப்டம்பர் 1-ஆம் தேதி தனக்கும் நந்திதாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததை வித்யுத் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார்.  சாகசமான ஒரு படத்தைப் பதிவிட்டு இதனை அவர் தெரியப்படுத்தியுள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   
  View this post on Instagram

   

  A post shared by Vidyut Jammwal (@mevidyutjammwal)


  சமீபத்தில் தனது தயாரிப்பு நிறுவனமான ஆக்‌ஷன் ஹீரோ பிலிம்ஸை தொடங்கிய வித்யுத், சங்கல்ப் ரெட்டி இயக்கும் புதிய திரைப்படமான 'ஐபி 71'-ஐ தயாரிக்கிறார். தற்போது அவர் 'குதா ஹாபிஸ்: அத்தியாயம் II படத்தில் நடித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: