ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

துணிவு அப்டேட்டை வெளியிட்ட சமுத்திரக்கனி… அஜித் ரசிகர்கள் உற்சாகம்..

துணிவு அப்டேட்டை வெளியிட்ட சமுத்திரக்கனி… அஜித் ரசிகர்கள் உற்சாகம்..

எச். வினோத்துடன் சமுத்திரக்கனி

எச். வினோத்துடன் சமுத்திரக்கனி

முன்னணி விநியோகஸ்த நிறுவனங்களுடன் துணிவு படம் கூட்டணி அமைத்துள்ளதால் இந்த படத்திற்கு பிரமாண்ட ஓபனிங் கிடைக்கும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

துணிவு படத்தின் அப்டேட்டை படத்தில் இடம்பெற்றுள்ள சமுத்திரக்கனி இன்று வெளியிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள புதிய படங்கள் லைக்ஸை குவித்து வருகிறது.

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக துணிவு படத்தில் அஜித், எச்.வினோத், போனி கபூர் ஆகியோர் கூட்டணி அமைத்துள்ளனர். இந்த படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கோக்கன், சிபி சக்கரவர்த்தி, அமீர், பாவ்னி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். வங்கி கொள்ளையை மையமாக வைத்து க்ரைம் ஆக்சன் த்ரில்லர் ஜானரில் துணிவு திரைப்படம் வெளியாகவுள்ளது. தற்போது படத்தின் இறுதிக் கட்ட பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. ஓரிரு நாட்களில் படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வித்தியாசமான திரைக்கதை.. சூப்பர் கான்செப்ட்.. கண்டிப்பாக பார்க்க வேண்டிய 10 படங்கள்!

8 ஆண்டுகளுக்கு பின்னர் அஜித், விஜய் படங்கள் பொங்கலுக்கு ரிலீஸாகுவதால் இந்த பொங்கல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் படப்பிடிப்பு தள புகைப்படங்களை, நடிகர் சமுத்திரக்கனி இன்று வெளியிட்டுள்ளார். இயக்குனர் எச். வினோத் மற்றும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷாவுடன் அவர் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

துணிவு படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. தமிழகத்தில் தற்போதைய சூழலில் இந்த விநியோகஸ்த நிறுவனமே முன்னணியில் இருக்கிறது.

வெளிநாடுகளில் துணிவு படத்தை லைகா நிறுவனம் வெளியிடவுள்ளது. தமிழில் இன்டஸ்ட்ரி ஹிட்டான பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை லைகா நிறுவனமே வெளியிட்டதால், துணிவு படத்திற்கும் அதிக திரையரங்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘வாரிசு நடிகை நடிகை’ விமர்சனத்தால் நெருக்கடிக்கு ஆளானேன்’ – ஜான்வி கபூர் பேட்டி

அமெரிக்காவில் துணிவு படத்தை ரிலீஸ் செய்யும் உரிமையை சரிகம சினிமாஸ் கைப்பற்றியுள்ளது. சமீபத்தில் மெகா ஹிட்டான ஆர்.ஆர்.ஆர். மற்றும் கே.ஜி.எஃப். 2 ஆம் பாகத்தை இந்த நிறுவனம்தான் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Actor Ajith, Kollywood