ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

துணிவு படத்தை வெளிநாடுகளில் ரிலீஸ் செய்யும் ‘லைகா’ – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

துணிவு படத்தை வெளிநாடுகளில் ரிலீஸ் செய்யும் ‘லைகா’ – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

துணிவு அஜித் - லைகா

துணிவு அஜித் - லைகா

பொங்கலையொட்டி ஜனவரி 12-ஆம் தேதி துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்கள் வெளியாகவுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  துணிவு திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமையை கைப்பற்றியதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

  அஜித் நடித்திருக்கும் துணிவு திரைப்படத்தை எச்.வினோத் உள்ளார். போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள அந்த திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. இந்த நிலையில் படத்தின் வியாபார பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

  அதில் தமிழக உரிமையை ஏற்கனவே ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியது. இதற்கான அறிவிப்பும் வெளியானது. இதைத் தொடர்ந்து வெளிநாட்டு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதை தற்போது அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

  ரிலீஸ் செய்த ‘அண்ணாத்த’ படத்தை இன்னும் பார்க்கவில்லை…’ – வசூலை விமர்சித்து உதயநிதி ஓபன் டாக்…

  இந்தியா தவிர பிற நாடுகளில் லைகா நிறுவனம் மூலம் துணிவு திரைப்படம் வெளியாகிறது. லைகா நிறுவனம் ஏற்கனவே தங்களுடைய சொந்த தயாரிப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை வெளிநாடுகளில் உள்ள விநியோகஸ்தர்கள் மூலம் சொந்தமாக வெளியிட்டது. அந்த முறையில் இந்த திரைப்படத்தையும் அந்த நிறுவனம் வெளியிட திட்டமிட்டிருக்கிறது.

  துணிவு படத்தில் எச்.வினோத், அஜித். போனி கபூர் கூட்டணி தொடர்ந்து 3ஆவது முறையாக இணைந்திருக்கிறது. வங்கி கொள்ளையை மையமாக கொண்டு துணிவு படம் உருவாக்கப்பட்டுள்ளது.

  பொங்கலையொட்டி ஜனவரி 12-ஆம் தேதி துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்கள் வெளியாகவுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. துணிவு படத்தில் ஒரேயொரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

  ராகுல் காந்தி பேரணியில் பங்கேற்ற பிரபல நடிகை… காங்கிரஸில் இணையப் போவதாக தகவல்…

  விஜய்யின் வாரிசு படத்தில் கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. இந்த படத்தை தெலுங்கில் அதிக திரையரங்குகளில் வெளியிடுவதற்கு ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கிடையே, துணிவு படத்தை வெளியிட திரையரங்குகளுடன் ஒப்பந்த பணிகளை ரெட் ஜெயன்ட் நிறுவனம் ஏறக்குறைய முடித்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித்தின் அடுத்த படத்தை லைகா நிறுவனம்தான் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Musthak
  First published:

  Tags: Actor Ajith