ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

உலக அளவில் துணிவுதான் ஃபர்ஸ்ட் - வரலாறு படைக்கவிருக்கும் நடிகர் அஜித் பட டிரெய்லர் - என்னனு தெரியுமா ?

உலக அளவில் துணிவுதான் ஃபர்ஸ்ட் - வரலாறு படைக்கவிருக்கும் நடிகர் அஜித் பட டிரெய்லர் - என்னனு தெரியுமா ?

நடிகர் அஜித் குமார்

நடிகர் அஜித் குமார்

அவரது ரசிகர்கள் ஏகே-வாக இருக்கும், விநாயக் மகாதேவாக இருக்கும் என தங்களது யூகங்களை பதிவிட்டுவருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

நடிகர் அஜித் குமார் நடிப்பில் துணிவு படத்தின் டிரெய்லர் வெளியாகவுள்ள நிலையில் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். கடந்த வாரம் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவால் அப்படம் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருந்தது. இந்த நிலையில் வானத்தில் போஸ்டரை பறக்கவிட்டு புரோமோஷன், நடிகர்கள் அறிமுகம், டிரெய்லர் என ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் இழுத்துள்ளனர் துணிவு படக்குழுவினர்.

நடிகர் பக்ஸ் இந்தப் படத்தில் ராஜேஷ் என்ற வேடத்திலும், நடிகர் ஜான் கொக்கென் கிரிஷ் என்ற வேடத்திலும் ராஜதந்திரம் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்த வீரா, ராதா என்ற வேடத்திலும் நடிகர் ஜி.எம்.சுந்தர் முத்தழகன் என்ர வேடத்திலும் தெலுங்கு நடிகர் அஜய், ராமசந்திரன் என்ற வேடத்திலும் நடித்துள்ளனர். பத்திரிகையாளர் மைபா நாராயணன் வேடத்தில் பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம் நடித்துள்ளார். சின்னத்திரை நடிகர் பிரேம், தனது சொந்தப் பெயரான பிரேம் என்ற பெயரிலேயே இப்படத்தில் நடித்திருக்கிறார்.

நடிகர் சமுத்திரக்கனி தயாளன் என்ற காவல் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார். தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், அஜித்தின் படத்தைப் பகிர்ந்து அவரது பெயர் என்ன என்று யூகித்து சொல்லுங்கள் என ரசிகர்களிடம் கேட்டுள்ளனர். இதனையடுத்து அவரது ரசிகர்கள் ஏகே-வாக இருக்கும், விநாயக் மகாதேவாக இருக்கும் என தங்களது யூகங்களை பதிவிட்டுவருகின்றனர்.

டிரெய்லர் அப்டேட் வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில் மலேசியாவின் கோலாலம்பூர் சிட்டி சென்டரில் இன்று இரவு 11 மணிக்கு ஹாலோகிராம் மூலம் டிரெய்லர் வெளியாகிறது. அந்த வகையில் உலக அளவில் ஹாலோகிராம் மூலம் வெளியிடப்படவுள்ள முதல் இந்திய படத்தின் டிரெய்லர் என்ற பெருமையை துணிவு படம் பெற்றுள்ளது.

பஞ்சாப்பில் நடைபெற்ற வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு தகவல் வெளியாகியிருந்தது. அதற்கேற்ப இந்தப் படம் ஆக்ஷன் திரில்லர் பட ஜானரில் உருவாகியுள்ளதாக இயக்குநர் தெரிவித்திருந்தார். மேலும் இப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்ட கதாப்பாத்திரங்களைத் தொடர்ந்து பிக்பாஸ் பிரபலங்களான அமீர், பாவனி, சிபி, கனா பட நாயகன் தர்ஷன் போன்றவர்களும் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

First published:

Tags: Actor Ajith, Manju Warrier, Thunivu