ஹோம் /நியூஸ் /entertainment /

துணிவு பட டிக்கெட்டுகள் திருட்டு... வேலூரில் மர்ம நபர்கள் கைவரிசை..!

துணிவு பட டிக்கெட்டுகள் திருட்டு... வேலூரில் மர்ம நபர்கள் கைவரிசை..!

வேலூர் அஜித் ரசிகர் மன்றம் அலுவலகம்

வேலூர் அஜித் ரசிகர் மன்றம் அலுவலகம்

அதிகாலை 1 மணி, 4 மணி ஆகிய நேரங்களில் படங்கள் திரையிடப்படுகின்றன. அதற்கான டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Vellore, India

வேலூரில் உள்ள அஜித்குமார் ரசிகர்கள் நற்பணி இயக்க அலுவலகத்தில் இருந்து துணிவு படத்தின் 150 டிக்கெட்டுகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். 

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடித்திருக்கும் துணிவு மற்றும் விஜய் நடித்திருக்கும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன. இந்த இரண்டு திரைப்படங்களும் நாளை வெளியிடப்படுகிறது. இந்நிலையில் 2 படங்களின் டிக்கெட் புக்கிங்  ஆன்லைனில் தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தன.

அதிகாலை 1 மணி, 4 மணி ஆகிய நேரங்களில் படங்கள் திரையிடப்படுகின்றன. அதற்கான டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வரும் வேலையில், ஆற்காடு சாலையில் உள்ள வேலூர் மாவட்ட அஜித்குமார் ரசிகர்கள் நற்பணி இயக்க அலுவலகத்தில் இருந்து துணிவு பட டிக்கெட்டுகள் திருடப்பட்டுள்ளன.

அலுவலகத்தின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த ரூ. 16,000 பணம் மற்றும் ரசிகர் மன்றத்துக்காக வழங்கப்பட்ட துணிவு படத்தின் சுமார் ரூ. 30,000 மதிப்பிலான 150 டிக்கெட்டுகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

First published:

Tags: Ajith fans, Thunivu, Vellore