ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

காசேதான் கடவுளடா..! ரூபாய் நோட்டில் ஏ.கே..! துணிவு படத்திற்காக மாஸ் பண்ணும் அஜித் ரசிகர்கள்..!

காசேதான் கடவுளடா..! ரூபாய் நோட்டில் ஏ.கே..! துணிவு படத்திற்காக மாஸ் பண்ணும் அஜித் ரசிகர்கள்..!

ரூபாய் நோட்டில் தல அஜீத்..!

ரூபாய் நோட்டில் தல அஜீத்..!

துணிவு திரைப்படத்தை 11ஆம் தேதி அதிகாலை ஒரு மணிக்கும், விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் சிறப்பு காட்சியை அதிகாலை 4 மணிக்கும் திரையிட விநியோக நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அஜித் ரசிகர்கள் ஒரிஜினல் ரூபாய் நோட்டு போல் டிக்கெட் அடித்து முதல் நாள் காட்சிக்கு ரசிகர்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இப்பொழுது அதிகம் விவாதிக்கப்படும் தலைப்புகளில் முதலிடத்தில் இருப்பது வாரிசா ? துணிவா ? என்பது தான். இரண்டு படங்களும் வெளியாகும் தேதி நெருங்க, நெருங்க விவாதங்கள் சூடுபடிக்கத் துவங்கியுள்ளன. எந்த டிரெய்லருக்கு அதிக வியூஸ் என்பதில் துவங்கி எந்தப் படத்துக்கு பெரிய கட் அவுட்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. எந்தப் படத்தின் முதல் நாள் வசூல் அதிகம் என விவாதங்கள் நீண்டு கொண்டே இருக்கும். அடுத்த ஓரிரு மாதங்களுக்கு இந்த நிலைதான் நீடிக்கும்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு இரண்டு நடிகர்களின் படங்களின் ஒரே தினத்தில் வெளியாகிறது என்பதுதான் காரணம். கடந்த சில ஆண்டுகளாக அஜித்தின் படங்கள் பெரிய புரமோஷன்கள் இல்லாமலே வெளியாகின. ஆனால் துபாயில் வானத்தில் போஸ்டர் பறக்கவிடப்பட்டது என இந்த முறை புரமோஷன்களில் அதிகம் கவனம் செலுத்திவருகின்றனர் துணிவு படக்குழு. காரணம் வாரிசுடன் துணிவு வெளியாவதுதான் எனக் கூறப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக அஜித் நடித்திருக்கும் துணிவு திரைப்படத்தை 11ஆம் தேதி அதிகாலை ஒரு மணிக்கும், விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் சிறப்பு காட்சியை அதிகாலை 4 மணிக்கும் திரையிட விநியோக நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன. இதனை சிறப்பிக்கும் விதமாக அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் தங்கள் பங்கிற்கு இரண்டு படங்களையும் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் கட் அவுட் வைப்பது, மாலைப் போட்டு பாத யாத்திரை செல்வது, தோப்புக்கரணம் போடுவடுவது என பல வித்தியாசமான நிகழ்வுகளில் இறங்கியுள்ளனர். அந்த வகையில் இப்போது பொள்ளாச்சியில் திரையரங்கு ஒன்றில் நடிகர் அஜித் படத்திற்கு ஒரிஜினல் பணம் நோட்டு எப்படி இருக்குமோ அதேபோன்று 'துணிவு' படத்தின் டிக்கெட் அச்சடிக்கப்பட்டு ரசிகர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ரசிகர்கள் இதனை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

First published:

Tags: Actor Ajith, Thunivu