ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

இதுக்குதான் வெய்ட்டிங்கா? வாரிசு ட்ரெய்லர் வெளியான ஒன்றரை மணிநேரத்தில், துணிவு ரிலீஸ் தேதியை அறிவித்த போனி கபூர்…

இதுக்குதான் வெய்ட்டிங்கா? வாரிசு ட்ரெய்லர் வெளியான ஒன்றரை மணிநேரத்தில், துணிவு ரிலீஸ் தேதியை அறிவித்த போனி கபூர்…

அஜித் - போனி கபூர்

அஜித் - போனி கபூர்

வாரிசு படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வாரிசு படத்தின் ட்ரெய்லர் வெளியான அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் துணிவு தயாரிப்பாளர் போனி கபூர் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். இதுதொடர்பான புதிய போஸ்டர்கள் கவனம் ஈர்த்து வருகின்றன. பொங்கலையொட்டி விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு படங்கள் திரைக்கு வரவுள்ள நிலையில், வாரிசு படத்திற்கு முன்னதாக ரிலீஸ் தேதியை துணிவு படக்குழு அறிவித்துள்ளது.

பொங்கலுக்கு வெளியாகும் என இரு படங்களும் சில மாதங்களுக்கு முன்பே அறிவிப்பை வெளியிட்டிருந்தன. இருப்பினும், தேதியை அறிவிப்பதில் இரு படக்குழுவினருமே தாமதம் காட்டி வந்தனர்.

இந்த சூழலில் வாரிசு படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. இதிலும், ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், வாரிசு ட்ரெய்லர் வெளியான அடுத்த ஒன்றரை மணி நேரத்தில், துணிவு படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.

துணிவு படத்தில் அஜித் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம். சுந்தர், ஜான் கோக்கன், சிபி சக்கரவர்த்தி, அமிர், பாவ்னி உள்ளிட்டோர் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளனர். ஜிப்ரான் இசையில் துணிவு படத்திலிருந்து 3 பாடல்கள் வெளியாகி ஹிட்டடித்துள்ளன.

யூடியூபில் சம்பவம் செய்யும் வாரிசு ட்ரெய்லர்.. ஒரு மணி நேரத்தில் இவ்வளவு வியூசா?

இதையடுத்து வாரிசு படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, இன்று வெளியான வாரிசு படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

' isDesktop="true" id="867458" youtubeid="9fux9swQ5AQ" category="cinema">

இந்த படத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம்,ஸ்ரீகாந்த், குஷ்பு, யோகிபாபு, ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா, நந்தினி ராய், கணேஷ் வெங்கட்ராமன், ஸ்ரீமன், விடிவி கணேஷ், ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசை தமன். வசனம், கூடுதல் திரைக்கதை மற்றும் பாடல்களை விவேக் எழுதியுள்ளார். ஒளிப்பதிவு கார்த்திக் பழனி. எடிட்டிங் பிரவீன் கே.எல்.,

First published:

Tags: Thunivu, Varisu