ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சென்னையில் நடந்த ‘துணிவு’ ஷூட்டிங்கில் பங்கேற்ற அஜித்… ரசிகர்களை சந்தித்த வீடியோ வைரல்

சென்னையில் நடந்த ‘துணிவு’ ஷூட்டிங்கில் பங்கேற்ற அஜித்… ரசிகர்களை சந்தித்த வீடியோ வைரல்

ரசிகர்களின் வரவேற்பை ஏற்கும் அஜித்.

ரசிகர்களின் வரவேற்பை ஏற்கும் அஜித்.

1987 - இல் பஞ்சாபில் நடந்த ஒரு கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ‘துணிவு’ திரைப்படம் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சென்னையில் நடைபெற்ற துணிவு படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு படப்பிடிப்பில் நடிகர் அஜித் பங்கேற்றார் அவர் ரசிகர்களை சந்தித்த பேசிய வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.

  அஜித் நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில், எச். வினோத் இயக்கத்தில் ‘துணிவு’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், ஜான் கோக்கன், சமுத்திரக்கனி, அமீர், பாவ்னி, சிபி சக்கரவர்த்தி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

  கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக துணிவு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இன்னும் சில நாட்கள் காட்சி மட்டுமே ஷூட் செய்யப்பட வேண்டியுள்ளது.

  விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்துவிட்டு, துணிவு படத்தை பொங்கலையொட்டி திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.  வலிமை படத்திற்கு ஒளிப்பதிவு செய்த நீரவ் ஷா இந்தப்படத்திலும் பணியாற்றியுள்ளார்.

  தீபாவளிக்கு களைக்கட்டும் கலர்ஸ் தமிழ் நிகழ்ச்சிகள்.. மிஸ் பண்ணிடாதீங்க!

  எச். வினோத்தின் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் இணைந்து பணியாற்றிய ஜிப்ரான் துணிவு படத்திற்கு இசை அமைக்கிறார். சில நாட்களுக்கு முன்பாக சென்னை மவுண்ட் ரோட்டில் துணிவு படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. இதையொட்டி வெளியான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

  மீண்டும் இயக்குனராக மாறும் எஸ்.ஜே. சூர்யா… கார் ரேஸ் படமாம்… ஹீரோ யார் தெரியுமா?

  இந்நிலையில் துணிவு படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் (Patch Work) சென்னையில் நடைபெற்றது. இதில் அஜித் பங்கேற்றுள்ளார். அப்போது கேரவனில் இருந்து வெளியே வந்து ரசிகர்களை பார்த்து கையசைக்கும் காட்சிகள், வைரல் ஆகியுள்ளன.


  The Word #THALA is an emotion 🔥🔥🔥
  .#Thunivu #AjithKumar pic.twitter.com/lrDqcTR0uL


  — AK𓃵ᵀʰᵘⁿᶦᵛᵘ (@AjithKumar_AK__) October 21, 2022

  1987 - இல் பஞ்சாபில் நடந்த ஒரு கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ‘துணிவு’ திரைப்படம் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு தீபாவளிக்கு துணிவு படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்பு தொடர்ச்சியாக தள்ளிக் கொண்டே சென்றதால், துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

  Published by:Musthak
  First published:

  Tags: Actor Ajith