துணிவு திரைப்படத்தின் இரண்டாவது பாடல், 'காசேதான் கடவுளடா' இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகிறது.
நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். ஜிப்ரன் இசையமைக்கிறார். இப்படத்திற்காக அஜித் முற்றிலும் மாறுபட்ட இரண்டு கெட் அப்களில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துணிவு படத்தில் அஜித் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
Money Money Money, it’s all about the Money 💸💵
Get ready for #ThunivuSecondSingle, #KasethanKadavulada out today at 2 pm #ThunivuPongal #Thunivu #Ajithkumar #HVinoth@boneykapoor @zeestudios_ @bayviewprojoffl @kalaignartv_off @mynameisraahul @GhibranOfficial pic.twitter.com/w7630hGcgH
— Red Giant Movies (@RedGiantMovies_) December 18, 2022
இப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து துணிவு படத்தின் முதல் சிங்கிளான ’சில்லா சில்லா’ என்ற பாடலை வெளியிட்டனர். இந்த பாடல் ஒரு வாரத்தில் 20 மில்லியன் பார்வைகளை யூட்டியூபில் நெருங்கியுள்ளது.
இந்நிலையில், படத்தின் இரண்டாவது பாடலான, 'காசேதான் கடவுளடா' பாடல் இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகிறது. பாடலின் போஸ்டரை வெளியிட்டு படக்குழு அதை உறுதிப்படுத்தியது. இந்த போஸ்டரில் நடிகர் அஜித் திரும்பி நிற்பது போன்றும் ரூபாய் நோட்டுகள் பறப்பது போன்ற சில்லெளட் படம் இருக்கிறது. இதனை பார்க்கும் போது ரசிகர்களுக்கு மங்காத்தா படம் நினைவுக்கு வரலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Ajith, Ajith, Entertainment