ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

'சரித்திரம் படைப்பவன்...' இதுவரை எந்த இந்திய நடிகருக்கும் கிடைக்காத பெருமை - கொண்டாடும் அஜித் ரசிகர்கள்!

'சரித்திரம் படைப்பவன்...' இதுவரை எந்த இந்திய நடிகருக்கும் கிடைக்காத பெருமை - கொண்டாடும் அஜித் ரசிகர்கள்!

அஜித் குமார்

அஜித் குமார்

இதுவரை இல்லாத அளவுக்கு நடிகர் அஜித்தின் துணிவு மிக பிரம்மாண்டமாக விளம்பரம் செய்யப்பட்டுவருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியாகவிருக்கிற துணிவு படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பிறகு டிரெய்லர் குறித்த விமர்சனங்கள்தான் கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன. இந்தப் படத்தின் பீஸ்ட் படத்தை நியாபகப்படுத்துவதாகவும், மணி ஹெய்ஸ்ட் போல இருப்பதாகவும் கருத்து தெரிவித்துவருகின்றனர். ஜிப்ரான் இசையில் இந்தப் படத்திலிருந்து 3 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

இதுவரை இல்லாத அளவுக்கு நடிகர் அஜித்தின் துணிவு மிக பிரம்மாண்டமாக விளம்பரம் செய்யப்பட்டுவருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் துபாயில் ஸ்கை டைவிங் முறையில் வானத்தில் துணிவு பட போஸ்டரை பறக்கவிட்டு மாஸ் காட்டினர். இந்த நிலையில் மலேசியா கோலாலம்பூரில் ஸ்கைரேப்பர் பில்டிங்கில் 360டிகிரி எல்இடி திரையில் துணிவு பட போஸ்டர் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனை துணிவு படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இங்கே ஒரு இந்திய திரைப்படத்தின் போஸ்டர் வெளியிடப்படுவது முதன்முறை. இதனை துணிவு படத்தை வெளிநாடுகளில் வெளியிடும் லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

இந்தியாவைப் போலவே மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ் படங்களுக்கான மார்க்கெட் பலமாக உள்ளது.  தமிழர்கள் அதிகம் வசிக்கும் அவ்விரு நாடுகளில் தமிழ் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்துவருவதன் காரணமாக அங்கும் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தப்படுகின்றன. ஆனால் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு நடிகர் அஜித் படம் விளம்பரப்படுத்தப்படுவதுதான் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வாரிசு படத்துடன் துணிவு படம் வெளியாவதன் காரணமாகவே படக்குழு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

முன்னதாக யார் நம்பர் 1 நடிகர் என்பதை நிரூபிக்கவே துணிவு படத்தை வாரிசுடன் வெளியிட நடிகர் அஜித் முடிவு செய்துள்ளதாக பத்திரிகையாளர் ஒருவர் கிளப்பிவிட்டிருந்தார். மற்றொரு பக்கம் வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜு நடிகர் விஜய்தான் தமிழில் நம்பர் 1 நடிகர், அஜித் அடுத்த இடத்தில் இருக்கிறார் என பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இரண்டு படங்களும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படும் நிலையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஒரே நாளில் வெளியானால் இரண்டு படங்களின் முதல் நாள் வசூல் பாதிக்கப்படக்கூடும். மேலும் திரையரங்குகளில் இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் மோதிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. இந்த காரணங்களால் அடுத்தடுத்த நாளிலேயே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இன்ஸ்டாகிராம் லைவில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய ராஷ்மிகா வாரிசு படம் ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Actor Ajith, Boney Kapoor, Thunivu