ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விறுவிறுப்பாக நடைபெறும் ‘துணிவு’ படத்தின் போஸ்ட் புரொடக்சன்… எச்.வினோத் ஃபோட்டோ வைரல்…

விறுவிறுப்பாக நடைபெறும் ‘துணிவு’ படத்தின் போஸ்ட் புரொடக்சன்… எச்.வினோத் ஃபோட்டோ வைரல்…

மமதி சாரி - எச்.வினோத்

மமதி சாரி - எச்.வினோத்

துணிவு போஸ்ட் புரொடக்சன்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், நடிகர்கள் ஒவ்வொருவராக வந்து டப்பிங் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  துணிவு படத்தின் டப்பிங் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக எச்.வினோத் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது.

  நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தொடர்ந்து எச்.வினோத் இயக்கம் துணிவு திரைப்படத்தில் அஜித் குமார் நடித்து வருகிறார்.

  இதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. 55 நாட்களுக்கு மேல் நடந்த முதல் கட்ட படப்பிடிப்பில் பெரும்பாலான காட்சிகளை படமாக்கி முடித்தனர். அதன் பின்பு படத்தொகுப்பு வேலைகள் நடைபெற்றன. அந்த சமயத்தில் நடிகர் அஜித்குமார் தன்னுடைய குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றார்.

  ‘வாத்தி’ படத்தின் அப்டேட் கொடுத்த ஜி.வி. பிரகாஷ்… தனுஷ் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் ட்ரீட்

  அதன் பின் சென்னை திரும்பி அவர், மீண்டும் துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்புக்காக கடந்த 23ஆம் தேதி நடிகர் அஜித்குமார் தாய்லாந்து புறப்பட்டார்.  அங்கு கடந்த 18 நாட்களாக தொடர் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

  இதைத் தொடர்ந்து கடந்த 11ஆம் தேதி படப்பிடிப்பு முற்றிலும் நிறைவு பெற்றது. இதன்பின்னர் விடுபட்ட சில காட்சிகளுக்கான ஷூட் சென்னையில் நடைபெற்றது.

  ‘வாரிசு’ படத்தின் அடுத்த அப்டேட்… இசை உரிமத்தை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்…

  தற்போது போஸ்ட் புரொடக்சன்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், நடிகர்கள் ஒவ்வொருவராக வந்து டப்பிங் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

  அந்த வகையில் நடிகையும், சினிமா, டிவி தொகுப்பாளினியுமான மமதி சாரி துணிவு படத்தின் டப்பிங் பணிகளை தற்போது முடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு முக்கிய கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


  இயக்குனர் எச். வினோத்துடன் மமதி டப்பிங் ஸ்டூடியோவில் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். துணிவு படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.

  8 ஆண்டுகளுக்கு பின்னர் விஜய்யின் படமான வாரிசும், அஜித்தின் துணிவு படமும் நேருக்கு நேர் மோதுவதால் சினிமா ரசிகர்கள் இந்த பொங்கலை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளார்கள்.

  Published by:Musthak
  First published:

  Tags: Actor Ajith