முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / துணிவு பட கொண்டாட்டத்திற்காக ரூ. 7 லட்சத்தில் மலர் மாலை… பெங்களூரு ரசிகர்கள் ஏற்பாடு

துணிவு பட கொண்டாட்டத்திற்காக ரூ. 7 லட்சத்தில் மலர் மாலை… பெங்களூரு ரசிகர்கள் ஏற்பாடு

துணிவு படத்தில் அஜித்

துணிவு படத்தில் அஜித்

துணிவு திரைப்படம் நாளை முதல் வெளியாகவுள்ளது. இதையொட்டி நள்ளிரவு 1 மணி சிறப்பு காட்சிகள் பல திரையரங்குகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

துணிவு படத்தின் முதல்நாள் முதல் காட்சி கொண்டாட்டத்திற்காக பெங்கரூரு ரசிகர்கள் மலர் மாலைகளுடன் தயாராகியுள்ளனர். இதன் மதிப்பு ரூ. 7 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதேபோன்று துணிவு வெளியாகும் தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளும் அஜித்தின் பேனர் கட்டவுட்டுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

தமிழ் சினிமாவில் 9 ஆண்டுகளுக்கு பின்னர் அஜித் - விஜய் நடித்துள்ள படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளன. முன்னதாக 2014 - இல் பொங்கலையொட்டி அஜித் நடித்த வீரம் திரைப்படமும், விஜய்யின் ஜில்லா திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகி இரண்டுமே நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

இந்நிலையில் அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரிசு படங்கள் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதையொட்டி இரு உச்ச நடிகர்களின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரு படங்களும் வெளியாக இன்னும் சில மணி நேரங்களே இருப்பதால், படம் வெளியாகக் கூடிய திரையரங்குகளில் ஏராளமான சிறப்பு நிகழ்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன.

முதல் நாள் முதல் காட்சிக்கு வருவோருக்கு உணவு, ரத்த தானம் செய்வோருக்கு டிக்கெட் என இரு நடிகர்களின் ரசிகர்களும், படத்தின் ரிலீஸை திருவிழாவை போன்று கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி பெங்களூருவில் முதல்நாள் முதல் காட்சிகாக மலர் அலங்காரம் செய்யப்படவுள்ளது. இதற்கு பயன்படுத்தப்படும் மலரின் விலை மதிப்பு ரூ. 7 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

துணிவு திரைப்படம் நாளை முதல் வெளியாகவுள்ளது. இதையொட்டி நள்ளிரவு 1 மணி சிறப்பு காட்சிகள் பல திரையரங்குகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

First published:

Tags: Thunivu