ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மூதாட்டியிடம் ஆசிர்வாதம்.. ஊழியரிடம் நலம் விசாரிப்பு.. ஏர்போர்ட்டில் பரபர அஜித்! வைரல் வீடியோ!

மூதாட்டியிடம் ஆசிர்வாதம்.. ஊழியரிடம் நலம் விசாரிப்பு.. ஏர்போர்ட்டில் பரபர அஜித்! வைரல் வீடியோ!

சென்னை விமான நிலையத்தில் அஜித்

சென்னை விமான நிலையத்தில் அஜித்

துணிவு பட புரொமோஷனுக்கு அஜித் வருவார் என்று பேசப்பட்டு வந்த நிலையில், நல்ல படத்திற்கு அதுவே விளம்பரம் என்று கூறி தான் வரமாட்டேன் என்பதை மறைமுகமாக சொல்லி விட்டார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சென்னை விமான நிலையத்தில் பயணிகளுடன் நடிகர் அஜித் செல்ஃபி எடுத்துக் கொண்டார். அவரை பாட்டி ஒருவர் ஆசிர்வதிக்கும் காட்சி வைரலாகி வருகிறது.

  இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் பணியாற்று ஊழியர் அசீம், அஜித்தின் புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாவில் விவரங்களை தெரிவித்துள்ளார். அசீம் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது-

  எனக்கு அஜித் சார் வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகத்தான் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரை அழைத்து வரும் பணியில் நியமிக்கப்பட்டிருந்தேன். ஐதராபாத்தில் இருந்து அவர் சென்னை திரும்பினார். அவருக்காக காத்திருப்பு பகுதியில் வெயிட்டிங்கில் இருந்தேன்.

  மீண்டும் சந்திரமுகி கூட்டணி? ரஜினியின் 170வது படத்தில் இணையம் முக்கிய இரு நடிகர்கள்.?! தீயாய் பரவும் தகவல்

  அஜித் வந்ததும் வயதில் மூத்தவர்களிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் லிஃப்டை அவருக்காக இயக்கினேன். அவர் என்னிடம் எந்த கல்லூரியில் படித்தாய், குடும்பம் எப்படி இருக்கிறது என்பதை விசாரித்தார்.

  விமான நிலையத்தில் சிலர் அவருடன் போட்டோ எடுப்பதற்காக வந்தனர். யாருக்கும் மறுப்பு தெரிவிக்காமல் அவர்களுடன் அஜித் சார் ஃபோட்டோ எடுத்துக் கொண்டார். அவரை விரும்பி யாரேனும் ஃபோட்டோ எடுக்க விரும்புகிறீர்களா என்று கேட்டு அவர்களை ஆச்சரியம் அடையச் செய்தார். பின்னர், நான் அவரை அவரது கார் வரையில் கொண்டு சென்று விட்டேன்.  தேங்க்ஸ் என்று என்னிடம் சொன்ன அஜித் சார், மீண்டும் சந்திக்கலாம் என்றார்.
   
  View this post on Instagram

   

  A post shared by Mohd Azeem (@azeem_6e)  இவ்வாறு அசீம் தனது இன்ஸ்டா பதிவில் கூறியுள்ளார்.

  அஜித்தின் புதிய ஏர்போர்ட் படங்கள் வைரலாகி வருகிறது. அஜித் நடிப்பில் தற்போது துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் புரொமோஷனுக்கு அஜித் வருவார் என்று பேசப்பட்டு வந்த நிலையில், நல்ல படத்திற்கு அதுவே விளம்பரம் என்று கூறி தான் வரமாட்டேன் என்பதை மறைமுகமாக சொல்லி விட்டார்.

  Thunivu: துணிவு டப்பிங்கில் பிக் பாஸ் அமீர்!

  இதற்கு விமர்சனங்கள் எழுந்தாலும், Word of Mouth தான் படத்தை வெற்றி பெறச்செய்யும் என்று அஜித்தின் ரசிகர்கள் கூறி வருகின்றனர். நன்கு புரொமோஷன் செய்யப்பட்ட படங்கள் சில ஓடாமல் போனதையும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.


  Published by:Musthak
  First published:

  Tags: Actor Ajith