முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / புதுச்சேரியில் துணிவு படத்தின் நள்ளிரவு சிறப்புக் காட்சி ரத்து

புதுச்சேரியில் துணிவு படத்தின் நள்ளிரவு சிறப்புக் காட்சி ரத்து

அஜித்

அஜித்

துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை வெளியாகவிருக்கிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

புதுச்சேரியில் துணிவு படத்தின் நள்ளிரவு சிறப்புக் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி துணிவு படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். ஜிப்ரன் இசையமைக்கிறார். இப்படத்திற்காக அஜித் முற்றிலும் மாறுபட்ட இரண்டு கெட் அப்களில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை வெளியாகவிருக்கிறது.

முதலில் துணிவு திரைப்படம் நள்ளிரவு 1 மணிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 16-ம் தேதி வரை அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் துணிவு படத்தின் நள்ளிரவு சிறப்புக்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து படம் அதிகாலை 5 மணிக்கு திரையிடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அந்தமானில் அதிக திரைகளில் திரையிடப்படும் அஜித்தின் துணிவு

9 வருடங்களுக்குப் பிறகு அஜித் மற்றும் விஜய் படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் இந்த பொங்கல் இருதரப்பு ரசிகர்களிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Ajith