ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

அஜித் நெகடிவ் ரோல்? மீண்டும் மங்காத்தாவா? துணிவு குறித்து உடைத்து பேசிய ஹெச்.வினோத்

அஜித் நெகடிவ் ரோல்? மீண்டும் மங்காத்தாவா? துணிவு குறித்து உடைத்து பேசிய ஹெச்.வினோத்

துணிவு

துணிவு

அவங்க கற்பனைய கொட்றது தான் பிரச்னையே. ஒன்னே ஒன்னு தான் சொல்ல விருப்பப்படுறேன். ஆடியன்ஸ் எதிர்பாக்குற எல்லாமே இந்த படத்துல இருக்கு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

படத்தில் வங்கி செட் பயன்படுத்தியதால் துணிவு கொள்ளை சம்பந்தப்பட்ட படம் என சொல்கிறார்கள். ஆனால் துணிவு ஒரு மல்டி ஜானர் படம் என படத்தின் இயக்குநர் வினோத் தெரிவித்துள்ளார்.

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் துணிவு திரைப்படம் 2023 பொங்கல் அன்று வெளியாகிறது. இந்நிலையில் திரைப்படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. அத்தோடு படத்தின் இயக்குநர் வினோத் படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இந்த படம் ‘ஹீஸ்ட்’ படம் என சொல்கிறார்களே?

வலிமை போலவே இந்த படத்திற்கு வரும் கணிப்புகள் தான் எங்கள் பிரச்னையே. ஒரு பேங்க் செட்டில் படம் எடுத்தோம். அதனால் உடனே இந்த படம், வங்கி கொள்ளை பற்றிய திரைப்படம் என வதந்திகள் பரவ தொடங்கின. இது ஒரு மல்டி ஜானர் படம். ஒரு ஜானரில் இதை அடைத்துவிட முடியாது. சுறுக்கமா சொல்லனும்னா இது ஒரு அயோக்கியர்களில் ஆட்டம்.

அஜித் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறாரா?

இதுக்கு நான் ஆம் என சொன்னால், அப்போ மங்காத்தாவானு கேப்பாங்க. அவங்க கற்பனைய கொட்றது தான் பிரச்னையே. ஒன்னே ஒன்னு தான் சொல்ல விருப்பப்படுறேன். ஆடியன்ஸ் எதிர்பாக்குற எல்லாமே இந்த படத்துல இருக்கு.

அவர் இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா?

இல்லை. இந்த கேரக்டர் மிஸ்ட்ரியாவே இருக்கட்டும். சமூக வலைதளங்களில் உருவாகும் கற்பனைகள் மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடுகிறது. படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் மட்டுமே பார்த்துவிட்டு படத்துக்கு வருவது நல்லது.

First published:

Tags: Ajith, Valimai, Vinoth