ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த துணிவு படக்குழு... என்ன தெரியுமா?

ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த துணிவு படக்குழு... என்ன தெரியுமா?

துணிவு படத்தில் அஜித்

துணிவு படத்தில் அஜித்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் துணிவு திரைப்படம் வரும் 11ஆம் தேதி வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் இருக்கிறது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

துணிவு திரைப்படத்திற்கு ரசிகர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்து படத்தை ரசித்து செல்ல வேண்டும் என படக் குழுவினர் விரும்புகின்றனர்.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் துணிவு திரைப்படம் வரும் 11ஆம் தேதி வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் இருக்கிறது.

துணிவு திரைப்படத்துடன் விஜய் நடித்திருக்கும் வாரிசு திரைப்படமும் அதே நாளில் வெளியாகிறது. இருந்தபோதிலும் துணிவு திரைப்படத்திற்கு அதிக விளம்பரங்கள் செய்யவில்லை. அதேபோல் ப்ரமோஷன் விஷயங்களிலும் படக்குழுவினர் பெரிய நாட்டம் செலுத்தவில்லை.

துணிவு திரைப்படத்திற்கு அதிக அளவில் விளம்பரம் செய்யாத நிலையில் வாரிசு திரைப்படம் மட்டும் அதிக அளவில் பிரமோஷன் செய்யப்பட்டு வருகிறது. இதனால் துணிவு திரைப்படம் விளம்பர யுக்தியில் பின்தங்கி இருக்கிறதோ என்ற எண்ணத்தை ரசிகர்கள் மத்தியில் எழுப்பியது. ஆனால் அது படக்குழுவினரின் திட்டம் என்று கூறுகின்றனர். இன்றைய நிலையில் அதிக புரமோஷன் செய்தால், அதை பார்க்கும் ரசிகர்கள், தங்களுக்குள் அதிக கற்பனையை வளர்த்துகொள்கின்றனர். எனவே, அந்த தவறை செய்துவிடக்கூடாது என்பதில் அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் திட்டமிட்டனர்.

விளம்பரங்கள் குறித்து அவர்கள் எடுத்த திட்டத்தை சரியாக செயல்படுத்தி வருகின்றனர். துணிவு படத்திற்காக பேட்டி கொடுத்த மஞ்சு வாரியர் உள்ளிட்ட நடிகர்களிடமும் அதையே தெரிவித்து இருக்கின்றனர். அதனால் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வாருங்கள் என்று மஞ்சுவாரியரும் கூறியுள்ளார்.

விளம்பர யுக்தியை தவிர, துணிவு படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு நடிகரையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என அஜித் விரும்புகிறார். அதற்காகவே அவர்களுக்கு என தனித்தனி போஸ்டர்களையும் வெளியிட வைத்துள்ளார்.

வாரிசு திரைப்படத்திற்கு பல்வேறு வகையில் ப்ரோமோஷன் செய்யப்பட்டாலும் அஜித்தின் துணிவு குழு உறுப்பினர் அமைதி காத்து வருகின்றனர். அந்த அமைதி தங்களுக்கு நிச்சயம் பெரிய வெற்றியை கொண்டு சேர்க்கும் எனவும் உறுதியாக உள்ளனர். துணிவு திரைப்படம் தமிழகத்தில் 480 முதல் 500 திரையரங்குகள் வரை வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read... தூர்தர்ஷனில் சீரியல்.. கனடாவில் ஒரு சாலை.. ஏ ஆர் ரஹ்மான் பற்றிய சுவாரஸ்ய தகவல்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Actor Ajith, Ajith fans, Thunivu