நடிகர் அஜித் குமாரின் துணிவு படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு மங்காத்தா அஜித்தை திரையில் பார்ப்பதாக அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். 5 நாட்களுக்கு பொங்கல் விடுமுறை இருப்பதால் இந்தப் படம் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலைப் பெறும் என எதிரபார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தில் அஜித் குமாருடன், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, பக்ஸ், ஜான் கொக்கேன், பால சரவணன், தர்ஷன் போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். ஜிப்ரான் இசையில் இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
இந்தப் படத்தில் ஜான் கொக்கேன் எதிர்மறை வேடத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் அஜித்துடன் வீரம் படத்துக்கு பிறகு துணிவு படத்தில் நடித்த அனுபவம் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் வீரம் படத்தில் நடித்தபோது எடுக்கப்பட்ட போட்டோவையும் துணிவு பட போட்டோவையும் பகிர்ந்து, கனவு நனவானது, எப்போதும், எப்போதும் பெருமை மிகு அஜித் ரசிகன் எனப் பதிவிட்டுள்ளார்.
Dreams Do Come True.
Always and always a proud Ajith Kumar fan.#nevergiveup#keepworkinghard#liveandletlive #dreambig#believeinyourself pic.twitter.com/qGEIKbkysm
— Highonkokken (@johnkokken1) January 13, 2023
சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மிரட்டினார் ஜான் கொக்கேன். வீரம் படத்தில் இடைவேளைக்கு முந்தைய சண்டைக்காட்சியில் பங்கேற்றிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. சார்பட்டா பரம்பரையைத் தொடர்ந்து நடிகர் அஜித்தின் துணிவு படமும் அவரை ரசிகர்களிடையே பிரபலமாக்கியிருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Ajith, Thunivu, Vinoth