ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

துணிவு பட புரொமோஷனுக்கு வருமாறு அஜித்திடம் பேசிய உதயநிதி… அஜித்தின் ரீப்ளே என்ன தெரியுமா?

துணிவு பட புரொமோஷனுக்கு வருமாறு அஜித்திடம் பேசிய உதயநிதி… அஜித்தின் ரீப்ளே என்ன தெரியுமா?

உதயநிதி - அஜித்

உதயநிதி - அஜித்

நொடிக்கு நொடி விறுவிறுப்பாக துணிவு படத்தை எச். வினோத் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    துணிவு படத்தின் புரொமோஷனில் பங்கேற்குமாறு அஜித்திடம் படத்தின் விநியோகஸ்தரான உதயநிதி பேசியுள்ளார். இதற்கு அஜித் சொன்ன பதிலையும் உதயநிதி தெரிவித்திருக்கிறார்.

    பொங்கலையொட்டி துணிவு படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ஆமிர், மமதி சாரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எச். வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    வலிமை படத்திற்கு ஒளிப்பதிவு செய்த நீரவ் ஷா இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்காக பெரும்பாலான டப்பிங் பணிகள் முடிந்து, இறுதிக் கட்டத்தை துணிவு நெருங்கியுள்ளது.

    விரைவில் துணிவு படத்தின் முதல் பாடல் வெளிவரவுள்ளது. வங்கிக் கொள்ளையை அடிப்படையாக கொண்டு, நொடிக்கு நொடி விறுவிறுப்பாக துணிவு படத்தை எச். வினோத் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

    WATCH – வடிவேலு நடித்துள்ள ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்திலிருந்து முதல் பாடல்….

    8 ஆண்டுகளுக்கு பின்னர் பொங்கலையொட்டி விஜய்யின் வாரிசு படத்துடன் அஜித்தின் துணிவு மோதுவதால் கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கிடையே துணிவு படத்தின் புரொமோஷனுக்காக அஜித்திடம் உதயநிதி பேசியுள்ளாராம். இதற்கு பதில் அளித்த அஜித், தன்னால் வர முடியாது என்று உதயநிதியிடம் பணிவுடன் கூறி விட்டாராம். இந்த தகவலை உதயநிதி சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

    உதயநிதி பேசியே, அஜித் புரொமோஷனுக்கு வர மறுத்திருப்பது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதேபோன்று துணிவு படம் செமையாக வந்திருப்பதாகவும் உதயநிதி அப்டேட் கொடுத்திருக்கிறார்.

    நடிகை ஸ்ரேயாவின் கவனம் ஈர்க்கும் படங்கள்

    முன்னதாக அஜித் புரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்றும், இந்த நிகழ்ச்சி சென்னை நேரு மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெறும் என்றும் தகவல்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. துணிவு படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

    Published by:Musthak
    First published:

    Tags: Actor Ajith