ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கடவுள் இருக்கிறாரா, இல்லையா..? - வைரலாகும் இயக்குநர் எச்.வினோத் ’பளிச்’ பதில்!

கடவுள் இருக்கிறாரா, இல்லையா..? - வைரலாகும் இயக்குநர் எச்.வினோத் ’பளிச்’ பதில்!

வினோத் - அஜித் குமார்

வினோத் - அஜித் குமார்

கடவுளை வைத்து வியாபாரம் பண்ணவோ, கடவுளை வைத்து அதிகாரத்தை அடையவோ முயற்சிக்கும்போதுதான் கடவுள் பிரச்னையா மாறுகிறார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3வது முறையாக கைகோர்த்திருக்கும் படம் துணிவு. வருகிற 11 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுவருகின்றனர். படம் தொடர்பாக நடிகை மஞ்சு வாரியரும், இயக்குநர வினோத்தும் பல ஊடகங்களில் படம் குறித்து தங்களது அனுபவங்களை பகிர்ந்துவருகின்றனர்.

இந்த நிலையில் இந்தப் படம் தொடர்பாக தொலைக்காட்சி நேர்க்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் வினோத், ''சபரிமலைக்கு நான் 6, 7 முறை சென்றிருக்கிறேன். கடவுள் இருக்கு இல்ல என அந்த டாபிக்குள்ள நான் போகல. எனக்கு கடவுள் வேணுமா இல்லையா அப்படினு கேட்டா எனக்கு கடவுள் தேவைப்படுது. கடவுள் இல்லனு வாழ்றதுக்கு ஒரு தெளிவும், தைரியமும் தேவைப்படுது. என் பிரச்னைகளிலிருந்து எனக்கு ஏற்படும் சிக்கல்களிலிருந்து வெளியே வர எனக்கு கடவுள் தேவைப்படுறாரு.

நான் கடவுளைக் கும்பிடுறது வழியா யாருக்கு எந்த பிரச்னையும் இல்ல. கடவுளை வைத்து வியாபாரம் பண்ணவோ, கடவுளை வைத்து அதிகாரத்தை அடையவோ முயற்சிக்கும்போதுதான் கடவுள் பிரச்னையா மாறுகிறார். எனக்கு கணிதத்தில் X என்பதற்கு ஒரு ரோல் இருக்கும் இல்லையா, அந்த மாதிரி எனக்கு கடவுள் நம்பிக்கை என்று பேசியுள்ளார். இயக்குநர் வினோத்தின் பேச்சுக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

ஜிப்ரான் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் படத்துக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. நீரவ் ஷா இந்தப் பட்ததுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொக்கென், பக்ஸ், தர்ஷன், பிக்பாஸ் அமீர், பாவனி போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

First published:

Tags: Actor Ajith, Thunivu, Vinoth