ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

வாரிசை பின்னுக்கு தள்ளி துணிவு வசூல் சாதனை - மாவட்டம் வாரியாக வசூல் விவரம்

வாரிசை பின்னுக்கு தள்ளி துணிவு வசூல் சாதனை - மாவட்டம் வாரியாக வசூல் விவரம்

அஜித் குமார் - விஜய்

அஜித் குமார் - விஜய்

துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் இணைந்து முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 42 கோடியே 35 லட்ச ரூபாய் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் சினிமாவில் ஓபனிங் கிங் என அழைக்கப்படும் அஜித் மற்றும் வசூல் மன்னன் என போற்றப்படும் விஜய் ஆகியோரின் திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் வெளியாகின. இந்த போட்டியில் வென்றே தீர வேண்டும் என இரு நடிகர்களும் இருந்தனர்.  இதனால் ரசிகர்கள் மத்தியிலும் கடுமையான போட்டி நிலவி வந்தது.

விஜய், அஜித் ஆகியோரின் போட்டியை அவர்களது டிரைலரிலும் பிரதிபலித்தன. துணிவு டிரைலரில் ஹீரோ வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன் என அஜித் கூறினார்.  அதேபோல் ஆட்டநாயகன் நான்தான் என வாரிசு டிரைலரில் விஜய் கூறினார். இந்த வசனங்கள் போட்டியை இன்னும் அதிகப்படுத்தின.

இந்த நிலையில் இரண்டு திரைப்படங்களும் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகின. இதில் எந்த திரைப்படம் முதல் நாளில் அதிக வசூல் செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது. இந்த நிலையில் இரண்டு திரைப்படங்களும் சேர்த்து தமிழகத்தில் முதல் நாளில் 42 கோடியே 35 லட்ச ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் உள்ள விநியோக ஏரியாக்களில் சென்னையில் துணிவு திரைப்படம் 1.35 கோடியும், வாரிசு 1.21 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளது.  அதேபோல் செங்கல்பட்டு ஏரியாவில் துணிவு 5.2  கோடியும், வாரிசு 5 கோடியும் வசூல் செய்துள்ளன. மேலும் துணிவு கோவையில் 3.3  கோடியும், சேலத்தில் 2.6 கோடியும், மதுரையில் 2.55 கோடியும், திருச்சி - தஞ்சாவூரில் 2.25 கோடியும், தென் ஆற்காடு - வட ஆற்காடு பகுதியில் 3.22 கோடியும், திருநெல்வேலி - கன்னியாகுமரி பகுதியில் 1.5 கோடியும் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் துணிவு முதல் நாளில், 21 கோடியே 97 லட்சம் வசூல் செய்துள்ளது.

அதேபோல் வாரிசு படம் துணிவு கோவையில் 3.25  கோடியும், சேலத்தில் 2.01 கோடியும், மதுரையில் 2.30 கோடியும், திருச்சி - தஞ்சாவூரில் 2.35 கோடியும், தென் ஆற்காடு - வட ஆற்காடு பகுதியில் 3.01 கோடியும், திருநெல்வேலி - கன்னியாகுமரி பகுதியில் 1.25 கோடியும் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் துணிவு முதல் நாளில், 20 கோடியே 38 லட்சம் வசூல் செய்துள்ளது.

தமிழகத்தில் முதல் நாளில் எந்த திரைப்படம் அதிக வசூலை செய்யப்போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த இரண்டு திரைப்படங்களில் துணிவு திரைப்படம் அதிக வசூலை எடுத்துள்ளது. இதன் மூலம் முதல் நாள் வசூலில் விஜயை அஜித் முந்தியுள்ளார்.  ஆனால் ஒட்டுமொத்த வசூலில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

First published:

Tags: Thunivu, Varisu