ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

துணிவு VS வாரிசு... 8 ஆண்டுகளுக்கு பின் திரையரங்கில் மோதும் அஜித்- விஜய் படங்கள்

துணிவு VS வாரிசு... 8 ஆண்டுகளுக்கு பின் திரையரங்கில் மோதும் அஜித்- விஜய் படங்கள்

வாரிசு-துணிவு

வாரிசு-துணிவு

துணிவு - வாரிசு படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் சினிமாவில் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் அஜித் மற்றும் விஜய் திரைப்படங்கள் மோதிக் கொள்கின்றன. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்தை தொடர்ந்து விஜய், அஜித் ஆகியோர் முன்னணி நாயகர்களாக வலம் வருகின்றனர்.  இவர்களின் திரைப்படங்கள் வெளியாகும் நாட்களை அவர்களின் ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடுகின்றனர். அத்துடன் அவர்களின் படங்களின் வசூலை மையமாக வைத்தும் போட்டி போட்டு கொள்கின்றனர்.

2010-ம் ஆண்டுக்கு முன்பு வரை குறிப்பிட்ட கால இடைவெளியில் அஜித் - விஜய் படங்கள் ஒரே நாளில் வெளியாகின. ஆனால் அதன்பின் அந்த முறையை இருவரும் தவிர்த்தனர். கடந்த பத்து ஆண்டுகளில் 2014-ம் மட்டும் வீரம் மற்றும் ஜில்லா ஆகிய படங்கள் மட்டுமே வெளியாகின.

இந்த நிலையில் அஜித்தின் துணிவு படம் பொங்கல் பண்டிகைக்கு ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுவதாக நியூஸ் 18 கூறியிருந்தது. இதை தொடர்ந்து வாரிசு படமும் பொங்களுக்கு வெளியாகிறது என தயாரிப்பாளர் தில்ராஜு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அப்போது இருந்தே அஜித் - விஜய் ரசிகர்கள்  சமூக வலைதளங்களில் கருத்து மோதலில் ஈடுப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் துணிவு திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் பொங்கல் பண்டிக்கைக்கு வெளியிடுவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் 8 ஆண்டுகளுக்கு பின் அஜித் - விஜய் படங்கள் மோதிகொள்வது உறுதியாகியுள்ளது.

Read More: தளபதி 67 படத்தில் விஜயுடன் இணைந்து நடிக்கும் பிக்பாஸ் பிரபலங்கள்?

ajith vijay same day release movies, vijay vs ajith who is box office king, vijay and ajith movies list, ajith vs vijay box office collection list, vijay and ajith together, ajith vs vijay who is best, vijay ajith clash movies, ajith vs vijay movie collection, vijay vs ajith who is box office king, ajith vs vijay who is best, ajith vs vijay who has more fans, vijay ajith age, விஜய் அஜித், விஜய் அஜித் படங்கள், துணிவு வாரிசு, விஜய் வாரிசு, அஜித் துணிவு

 துணிவு திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் அறிவிப்புக்கு பின், விஜய் - அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில்  கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக துணிவு அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் நடிகர் விஜய் தன்னுடையை டிவிட்டர் DP-ஐ மாற்றினார். அதில் சிரிப்புடன் விஜய் இருப்பது போன்ற காட்சி உள்ளது. இது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும் அஜித் படக்குழுவுக்கு விஜய் பதில் சொல்லும் விதமாக அந்த புகைப்படம் உள்ளது என கூறி வருகின்றனர். ஏற்கனவே இரு ரசிகர்களும் மோதிக்கொள்ளும் நிலையில் விஜயின் DP மேலும் தூண்டி விடும் விதமாக அமைந்துள்ளது.

துணிவு - வாரிசு ஆகிய படங்கள் பொங்கல் வெளியீடு என்று அறிவித்தாலும், வெளியீட்டி தேதி வெளியாகவில்லை. இரு படங்களின் தணிக்கை முடிந்தபின்னே தேதி வெளியாகும். இருந்தாலும் வாரிசு ஜனவரி 11-ம் தேதியும், துணிவு 12-ம் தேதியும் வெளியாகும் என்று திரைத்துறையில் கூறப்படுகிறது. அதே சமயம் இரு படங்களும் ஒரே நாளில் வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை எனவும் தெரிவிக்கின்றனர். ஒரே நாளில் வெளியானால் முதல் நாள் வசூலில் எந்த படமும் புதிய சாதனை படைக்க முடியாத சூழல் உள்ளது.

Published by:Srilekha A
First published:

Tags: Actor Ajith, Actor Vijay