ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மொபைல் போன் வைத்துக் கொள்ளாத துணிவு அஜித்... ஏன் தெரியுமா?

மொபைல் போன் வைத்துக் கொள்ளாத துணிவு அஜித்... ஏன் தெரியுமா?

அஜித்

அஜித்

அஜித் ஒவ்வொரு படத்திற்கு பிறகும் தனது தொடர்பு எண்ணை மாற்றிக்கொண்டே இருப்பார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நடிகர் அஜித் மொபைல் போன் பயன்படுத்தாத விஷயம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நவீன காலத்தில், மொபைல் போன்கள் ஒரு பொதுவான பொருளாக மாறி, தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு பகுதியாக அனைவரையும் டிஜிட்டல் முறையில் இணைக்கிறது. ஆனால், நடிகர் அஜித் மொபைல் போன் பயன்படுத்தவில்லை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அஜித்தும், த்ரிஷாவும் நான்கு முறை இணைந்து நடித்துள்ளனர். அதோடு இருவரும் அஜித்தின் 62வது படத்தில் மீண்டும் ஜோடி சேரவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த வாரம் த்ரிஷா நடிப்பில் 'ராங்கி' திரைப்படம் வெளியானது. இதையடுத்து பல புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டார். அப்போது த்ரிஷா, அஜித்தின் மொபைல் எண்ணை தனது தொலைபேசியில் என்னவாக சேமித்திருக்கிறார் எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அஜித் மொபைல் போன் பயன்படுத்தவில்லை என்றும், அவருடன் எப்போதும் இருக்கும் அவரது உதவியாளர் மூலம் மட்டுமே அவரைத் தொடர்பு கொள்ள முடியும் என்றும் ஆச்சரியமான உண்மையை வெளிப்படுத்தினார் த்ரிஷா. அதனால், அவருக்கு தனி மொபைல் தேவைப்படவில்லை எனத் தெரிகிறது.

அஜித் ஒவ்வொரு படத்திற்கு பிறகும் தனது தொடர்பு எண்ணை மாற்றிக்கொண்டே இருப்பார் என்றும், ஏனெனில் அவர் வேறொரு படத்தில் பிஸியாக இருக்கும்போது முந்தைய படக்குழுவினர் தன்னை தொந்தரவு செய்வதை விரும்புவதில்லை என்றும் முன்பே தகவல்கள் வெளியாகின. இருப்பினும், அஜித்தின் மனைவி ஷாலினியிடம் மொபைல் போன் உள்ளது, மேலும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆக்டிவாக உள்ளார். சமீபத்தில் தனது குடும்பத்துடனான படங்களையும், மகள் அனோஷ்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி சில படங்களையும் பகிர்ந்து கொண்டார் ஷாலினி.

பவர் சீட்ல இல்ல, அதுல வந்து உட்காருறவன்கிட்ட தான்... வாரிசு டிரைலர் படங்கள்!

அஜித்தின் 'துணிவு' இந்த பொங்கலுக்கு பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது. ஜனவரி 11-ம் தேதி வெளியாகும் இப்படத்துடன், விஜய்யின் வாரிசு திரைப்படமும் வெளியாவதால் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Ajith