ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

துணிவு படத்திற்காக புதிய தோற்றத்தில் அஜித்… வைரலாகும் க்ளீன் ஷேவ் ஃபோட்டோ…

துணிவு படத்திற்காக புதிய தோற்றத்தில் அஜித்… வைரலாகும் க்ளீன் ஷேவ் ஃபோட்டோ…

அஜித்தின் நியூ லுக்

அஜித்தின் நியூ லுக்

கடந்த ஒரு ஆண்டுள் கழித்து தன்னுடைய தோற்றத்தை அஜித்குமார் மாற்றி உள்ளார். அதற்கான புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

துணிவு திரைப்படத்தில் இடம்பெறும் அஜித்தின் புதிய தோற்றம் வெளியாகி உள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான பாடல் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.  அதேசமயம் சில பேட்ச் ஒர்க் காட்சிகளையும் எடுத்து வந்தனர்.

இந்த நிலையில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.  இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் அதிக தாடியுடன்,  வெள்ளை நிற முடியுடனும் நடித்து வந்தார். அந்த தோற்றம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தது. மேலும் கடந்த ஒரு ஆண்டு காலமாக அதே தோற்றத்தில் நடிகர் அஜித் வலம் வந்தார்.

பிரபாஸ் இப்படி செய்வார்ன்னு நினைக்கல... சூர்யா சொன்ன சுவாரஸ்யம்!

குறிப்பாக, குடும்பத்தினருடன் வெளிநாடு சென்ற போதும் அதே தோற்றத்தில்தான் இருந்தார் அஜித். இந்த நிலையில் தற்போது படத்தின் இறுதி காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

அதில் சேவ் செய்த அஜித்குமாரின் தோற்றம் இடம்பெற்றுள்ளது.  இதன் மூலம் கடந்த ஒரு ஆண்டுள் கழித்து தன்னுடைய தோற்றத்தை அஜித்குமார் மாற்றி உள்ளார். அதற்கான புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அஜித்குமார் நடித்த வரும் துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. க்ளீன் ஷேவில் வெளிவந்துள்ள அஜித்தின் புதிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

லவ் டுடே முதல் மான்ஸ்டர் வரை... இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட்!

துணிவு படத்தை தமிழ்நாட்டில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. வெளிநாடுகளில் இந்த படத்தை லைகா வெளியிடவுள்ளது. இந்த படத்திலிருந்து முதல் பாடல் அடுத்த வாரம் வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துணிவு படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், சிபி சக்கரவர்த்தி, அமீர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

First published:

Tags: Kollywood