• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நடிகர் விமல் புகார் - தயாரிப்பாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு!

நடிகர் விமல் புகார் - தயாரிப்பாளர் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு!

விமல்

விமல்

விமல் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த இந்த புகார் மீது முதலில் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. பிறகு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, மூவர் மீதும் வழக்கு தொடர்வதற்கான உத்தரவைப் பெற்றார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நடிகர் விமல் சென்னை விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் தயாரிப்பாளர் உள்பட மூன்று பேர்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

விமல் தனது புகாரில் கூறியிருப்பதாவது, "கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கிய மன்னர் வகையறா என்ற படத்தில் நடித்தேன். பண பிரச்னை காரணமாக அந்தப்படத்தை தனது A3V தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிட்டேன். இதற்கு பைனான்சியர் சிங்காரவேலன், கோபி ஆகியோர் படத்தை தயாரிக்க பணம் ஏற்பாடு செய்து தந்தனர். அவர்களை நம்பி பல காசோலைகள் மற்றும் ஆவணங்களிலும் கையெழுத்திட்டேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் படத்தை தயாரிக்க 3 கோடி ரூபாய் செலவானதாகவும், அதனை விற்பனை செய்ததில் 4 கோடி ரூபாய் கிடைத்ததாக சிங்காரவேலன் தெரிவித்தார். அந்த நான்கு கோடி ரூபாய் பணமும் படத்திற்காக கடனாக வாங்கிய 3 கோடி ரூபாய் பணத்திற்கான வட்டிக்காக செலவாகி விட்டதாக சிங்காரவேலன் என்னிடம் தெரிவித்தார்.



அசல் 3 கோடி பணத்துக்காக எதிர்வரும் காலத்தில் படங்கள் நடித்து சம்பளத்தின் மூலம் கொடுத்தேன். இதனிடையே மன்னர் வகையறா படத்தை விற்பனை செய்ததில் 8 கோடி ரூபாய் கிடைத்ததை மறைத்து பொய் கணக்கு மூலம் என்னை சிங்காரவேலன் மோசடி செய்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.



மேலும் தன் தயாரிப்பு நிறுவனத்தை தவறாக பயன்படுத்தி பல ஆவணங்கள் மற்றும் காசோலைகளில் கையெழுத்து வாங்கி பண மோசடி செய்துள்ளனர். தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கு உடந்தையாக கோபி மற்றும் விக்னேஷ் ஆகியோர் செயல்பட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்."

Also read... டிஜிட்டலில் உலகம் சுற்ற வருகிறார் சயின்டிஸ்ட் முருகன்...!

விமல் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த இந்த புகார் மீது முதலில் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. பிறகு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, மூவர் மீதும் வழக்கு தொடர்வதற்கான உத்தரவைப் பெற்றார். அதன் பிறகே விருகம்பாக்கம் போலீசார் சிங்காரவேலன் உள்ளிட்ட மூவரும் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: