Home /News /entertainment /

பார்த்திபனின் இரவில் நிழல் திரைபடத்தில் மூன்று ஆஸ்கார் விருதாளர்கள்!

பார்த்திபனின் இரவில் நிழல் திரைபடத்தில் மூன்று ஆஸ்கார் விருதாளர்கள்!

இரவின் நிழல்

இரவின் நிழல்

Parthiban: படத்தில் ஏற்கனவே ஆஸ்கார் விருது வென்ற ஏ. ஆர். ரஹ்மான் இருக்கையில் ஒலி கோர்ப்புக்கு Cottalango Leon என்பவரையும் விஷுவல் எபெக்ட் மேற்பார்வையாளராக Craig Mann என்பவரையும் பார்த்திபன் ஒப்பந்தம் செய்துள்ளார்.

  • News18
  • Last Updated :
ஒத்த செருப்பு படத்தை இயக்கிய பார்த்திபன் அடுத்து இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்தப் படம் சிங்கிள் ஷாட் மூவியாக தயாராகி உளளது. அதாவது ஒரே டேக்கில் மொத்த படத்தையும் எடுத்து உள்ளனர்.

படத்துக்குப் படம் வித்தியாசமான முயற்சிகளை செய்து வரும் பார்த்திபன் ஒத்த செருப்பு திரைப்படத்தில் தான் மட்டுமே நடித்திருந்தார். இந்தப் படத்தை அபிஷேக் பச்சன் நடிப்பில் இந்தியிலும் அவர் எடுத்துள்ளார். இதையடுத்து இரவின் நிழல் என்ற படத்தை சிங்கிள் ஷாட்டில் எடுப்பதாக அறிவித்தார். படத்துக்கு இசை ஏஆர் ரகஹ்மான். தற்போது இந்தப் படம் முழுமையாக எடுக்கப்பட்டுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன

உலக அளவில் பல சிங்கிள் ஷாட் திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து இரவின் நிழல் முற்றிலும் மாறுபட்டுள்ளது. அதாவது இதுவரை எடுக்கப்பட்ட சிங்கிள் ஷாட் மூவி அனைத்திலும் கதை நேர்கோடாக அதாவது லீனியராக சொல்லப்பட்டிருக்கும்.முதல்முறையாக இரவின் நிழல் திரைப்படத்தில் நான்-லீனியர் ஆக கதை சொல்லப்பட்டுள்ளது. இது மிகவும் சவாலான விஷயம்.

Also read... விஷ்ணு விஷாலின் FIR பட ட்ரெய்லரை பாராட்டிய கே ஜி எஃப் இயக்குனர்!
படத்தில் ஏற்கனவே ஆஸ்கார் விருது வென்ற ஏ. ஆர். ரஹ்மான் இருக்கையில் ஒலி கோர்ப்புக்கு Cottalango Leon என்பவரையும் விஷுவல் எபெக்ட் மேற்பார்வையாளராக Craig Mann என்பவரையும் பார்த்திபன் ஒப்பந்தம் செய்துள்ளார். இவர்கள் இருவருமே ஆஸ்கார் விருது வென்றவர்கள். இதில் Cottalango Leon ஸ்பைடர் மேன், மென் இன் பிளாக் போன்ற சீரிஸ்களில் பணியாற்றியவர். Craig Mann 2014 இல் Whiplash படத்துக்காக ஆஸ்கர் மற்றும் பாஃப்டா விருது வாங்கியவர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: AR Rahman, Parthiban

அடுத்த செய்தி