சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் ரத்தம் திரைப்படத்தில் மூன்று நாயகிகள் நடிக்கின்றனர்.
தமிழ்ப் படம், தமிழ்ப் படம் 2 ஆகிய படங்களை இயக்கிய சி.எஸ்.அமுதன் சென்ற வருட இறுதியில் விஜய் ஆண்டனி நடிப்பில் ஒரு படத்தை ஆரம்பித்தார். அதன் முதல் ஷெட்யூல்ட் முடிந்த நிலையில் நேற்று படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர். படத்துக்கு ரத்தம் என பெயர் வைத்துள்ளனர். எழுத்தாளர்கள் அதிஷா, கார்க்கி பவா படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர்.
இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன், நிவேதா, மகிமா நம்பியார் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். ஆனால், இதில் ஒருவர் மட்டுமே விஜய் ஆண்டனியின் ஜோடியாக நடிக்கிறார். அது யார் என்பது
படத்தின் ட்விஸ்டுகளில் ஒன்றாக இருக்கும்.
படத்தின் கணிசமான காட்சிகளை கொல்கத்தாவில் படமாக்குகின்றனர். தற்போது அங்கு இரவு ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் கொல்கத்தா ஷெட்யூல்டை தொடங்குகின்றனர். அதற்குள் இரவு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படும் என்று நம்புகிறார்கள். கொல்கத்தா ஷெட்யூல்ட் முடிந்ததும் ஸ்பெயினில் சில காட்சிகளை எடுக்க திட்டமிட்டுள்ளனர். வித்தியாசமான கதைக்களத்தில் ரத்தம்
படம் இருக்கும் என சி.எஸ்.அமுதன் கூறியுள்ளார்.
ஒரே ஹோட்டலில் தங்கியிருக்கும் தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - பிரச்னைக்கு தீர்வு காண்பார்களா?
இன்பினிட்டி பிலிம் வென்ஜர்ஸ் ரத்தம் படத்தை தயாரிக்கிறது. ஆகஸ்டில் வெளியிடும் திட்டத்துடன் படத்தை எடுத்து வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.