ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

ஒரு நியாயம் வேணாமா? ஐஸ்வர்யாராயின் பெயரில் போலி பாஸ்போர்ட் - வசமாக சிக்கிய நபர்கள்

ஒரு நியாயம் வேணாமா? ஐஸ்வர்யாராயின் பெயரில் போலி பாஸ்போர்ட் - வசமாக சிக்கிய நபர்கள்

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

நடிகை ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட் தயார் செய்தவர்களை போலீசார் கைது செய்தனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்களுக்கு படத்தைப் பார்த்தபோது சில கதாப்பாத்திரங்களுக்கு வேறு  நடிகர்கள் நடித்திருக்கலாம் என மாற்றுக் கருத்துகள் இருந்தன. ஆனால் நந்தினி கதாப்பாத்திரத்துக்கு ஐஸ்வர்யா ராயைத் தவிர வேறு யாரையும் கற்பனை கூட செய்திருக்க முடியாது. அந்த அளவுக்கு நந்தினியாகவே தெரிந்தார் ஐஸ்வர்யா.

இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள நிலையில் நந்தினி கதாப்பாத்திரத்தின் முழுமையான வில்லத்தனத்தைப் பார்க்கலாம்.

'வாரிசு' இசை வெளியீட்டு விழாவில் 'நண்பர்' அஜித் குறித்து விஜய் பேசுவாரா?

இந்த நிலையில் தேசிய அளவில் பிரபலமாக இருக்கும் ஐஸ்வர்யா ராயின் பெயரை நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இருவர் மற்றும் கானா நாட்டைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர் போலி பாஸ்போர்ட்டில் பயன்படுத்தியிருக்கிறார்கள் . ஒகலோய் டாமியோன், ஏக் உஃபெர்முவே ஆகிய நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர்களும் அட்வின் கோலின்ஸ் என்ற கானா நாட்டைச் சேர்ந்த ஒருவரும் ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி பாஸ்போர்ட்டை தயாரித்த குற்றத்துக்காக கைது செய்திருக்கிறார்கள்.

மூவரையும் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா காவல்துறையினர் கைது செய்து விசாரித்திருக்கின்றனர். அப்போது அவர்களிடம் ரூ.1.81 கோடி அளவுக்கு போலியான இந்திய பணத்தை வைத்திருந்திருக்கிறார்கள். போலியான விசாகளும் அவர்களிடமிருந்திருக்கிறது. மேலும் அவர்களிடமிருந்து 6 மொபைல் போன்கள், 11 சிம் கார்டுகள், லேப்டாப்கள், பிரிண்டர்ஸ்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

First published:

Tags: Aishwarya Rai