முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / திருமணத்தை நினைத்தாலே எங்களுக்கு பதற்றமாகிறது - ஸ்ருதி ஹாசன் காதலர் சாந்தனு

திருமணத்தை நினைத்தாலே எங்களுக்கு பதற்றமாகிறது - ஸ்ருதி ஹாசன் காதலர் சாந்தனு

காதலருடன் ஸ்ருதி ஹாசன்

காதலருடன் ஸ்ருதி ஹாசன்

சென்னை நகரம் கலாச்சாரம் நிறைந்தது. நகரத்தின் கட்டிடக்கலை, குறிப்பாக கோவில்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

  • Last Updated :

திருமண எண்ணம் தங்களை பதற்றமடையச் செய்வதாக நடிகை ஸ்ருதி ஹாசனின் காதலர் சாந்தனு ஹஸாரிகா தெரிவித்துள்ளார்.

ஆர்டிஸ்ட் சாந்தனு ஹசாரிகா கவுகாத்தியில் பிறந்து வளர்ந்திருக்கலாம், ஆனால் அவருக்கு சென்னையுடன் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. பொறியியல் படிப்பதற்காக சென்னை வந்த அவர் பின்பு கலைத்துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆசையில் படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு ஊர் திரும்பியிருக்கிறார். தற்போது அவர் காதலித்து அவ்ரும் ஸ்ருதி ஹாசனும் சென்னையைச் சேர்ந்தவர் தான்.

டைம்ஸ் ஆப் இந்தியாவுடனான உரையாடலில் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார் சாந்தனு. அதில், “நான் சென்னையில் என்ஜினியரிங் படித்தேன், கலைத் தொழிலைத் தொடர்வதற்காக படிப்பை பாதியிலேயே நிறுத்தினேன். சென்னை நகரம் கலாச்சாரம் நிறைந்தது. நகரத்தின் கட்டிடக்கலை, குறிப்பாக கோவில்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். நுணுக்கங்கள், சிற்பங்கள், வண்ணங்கள், கட்டிடக்கலை எல்லாம் என்னை ஈர்க்கின்றன. நவீன கட்டிடக்கலை மற்றும் அழகிய கோயில்களின் கலவையில் சென்னை நகரம் திகழ்கிறது.

திருமணமான 5 மாதத்தில் பெண் குழந்தைக்கு தாயான அண்ணாத்த பட நடிகை

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திருமணத்தைப் பற்றி பேசினாலே எனக்கும் ஸ்ருதிக்கும் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. ஒரு கலைஞனாக, எந்த விதமான சமூகக் கட்டமைப்பையும் புரிந்துகொள்வது கடினம். நான் எப்போதும் சுதந்திரமாக, எல்லாவற்றையும் வெளிப்படுத்தி வாழ்ந்து வருகிறேன். அதைப் புரிந்துகொள்ளும் துணை இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. எங்கள் உறவு கலையை அடிப்படையாகக் கொண்டது” என்று அதில் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Actress shruti Haasan